தேசியம்: பஞ்சாபிலும் சதி!
பஞ்சாபிலும் சதி! மேற்கு வங்க மாநிலத்தை போல பஞ்சாபிலும் பயம் மற்றும் பிரிவினைவாத அரசியலை புகுத்தி, அதன் மூலம் சமூகங்களை துண்டாடி ஆட்சியை பிடிக்க பா.ஜ., முயன்று வருகிறது. மாநிலத்தின் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும். பகவந்த் மான் பஞ்சாப் முதல்வர், ஆம் ஆத்மி கட்சி சி.பி.ஐ., விசாரணை! மேற்கு வங்கத்தில், சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த வன்முறை சம்பவங்களில், திரிணமுல் காங்., தொண்டர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் கட்சி அலுவலகங்களும் சூறையாடப்பட்டுள்ளன. இது குறித்து, நீதிமன்றம் கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சவுகதா ராய் மூத்த தலைவர், திரிணமுல் காங்., கட்சி கைவிட மாட்டோம்! உத்தர பிரதேச மாடலை பின்பற்றி, மேற்கு வங்கத்தில் குறுக்கு வழியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதற்கு தேர்தல் கமிஷனும் உடந்தை. ஆட்சி அதிகாரத்திற்காக, தி.மு.க.,வை காங்., கழற்றி விட்டுள்ளது. இக்கட்டான காலங்களில், காங்கிரசை போல நாங்கள் கூட்டாளிகளை கைவிட மாட்டோம். அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி கட்சி