உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் அணுகுமுறை சரியல்ல!

ராகுல் அணுகுமுறை சரியல்ல!

காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் அரசியல் அணுகுமுறை, 'இண்டி' கூட்டணியை பலப்படுத்துவதாக இல்லை. மாறாக, கூட்டணியை பலகீனப்படுத்துகிறது. அவரது செயல்பாடுகள் பெரும்பாலும் பா.ஜ.,வுக்கே பலனளிக்கின்றன. இத்தகைய போக்கை ராகுல் உடனடியாக கைவிட வேண்டும். பினராயி விஜயன் கேரள முன்னாள் முதல்வர், மார்க்.கம்யூ.,நீண்ட கால இலக்குகள்! தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகியது அவரது சொந்த முடிவு. இதை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. பா.ஜ., ஒரு மிகப்பெரிய தேசிய கட்சி. குறுகிய கால அரசியல் கணக்குகளை விட, நீண்ட கால தேசிய இலக்குகளிலேயே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். ராதா மோகன் தாஸ் அகர்வால் ராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.,முற்றிலும் வதந்தி! காங்., கட்சியுடன் திரிணமுல் காங்கிரசை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஊடகங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி. கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், பா.ஜ.,வுக்கு பயந்து அக்கட்சிக்கு ஆதரவு தருகின்றனர். இது அரசியல் தந்திரம். பா.ஜ.,வுக்கு இது போன்ற வேலைகள் எல்லாம் அத்துப்படி. கல்யாண் பானர்ஜி லோக்சபா எம்.பி., - திரிணமுல் காங்., கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை