வெளிநாட்டு மனப்பான்மை!
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளிநாடு செல்லும்போ தெல்லாம் நம் நாட்டின் பொருளாதாரம் , ஜனநாயகம் மற்றும் இறையாண்மையை விமர்சித்து பேசுகிறார். இதற்கு அக்கட்சி தலைவர்கள் வெளிநாட்டு மனப்பான்மையுடன் இருப்பதே காரணம். வெளிநாட்டு சக்திகளின் துாண்டுதலால் அக்கட்சி நம் நாட்டை பிளவுபடுத்த முயல்கிறது. செஷாத் பூனாவாலா செய்தி தொடர்பாளர், பா.ஜ.,நாட்டை பாதுகாப்போம்!
நாட்டை சூறையாடிய மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, அயோத்தி ராமர் கோவில் காணிக்கையையும் விட்டு வைக்காமல் கொள்ளை அடித்துள்ளது. இந்த அரசை நாம் தோற்கடிக்க வேண்டும். ஒருங்கிணைந்து நாட்டை பாதுகாப்போம். நல்ல நாட்கள் வரும் என்ற மோடி அரசின் முழக்கமும் பொய். கபில் சிபல் ராஜ்யசபா எம்.பி., சுயேச்சை
பதிலளிக்க வேண்டும்!
கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள காங்., அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் வாக்காளர்கள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவதையே எதிர்க்கிறோம். நாங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ள கோரிக்கைகளுக்கு தேர்தல் கமிஷன் பதிலளிக்க வேண்டும். பிரியங்க் கார்கே கர்நாடக உள்துறை அமைச்சர், காங்கிரஸ்