உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணக்கார முதல்வரா?

பணக்கார முதல்வரா?

நான் தான் நாட்டின் பணக்கார முதல்வர் என்று அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கடந்த, 20 ஆண்டுகளில் நான் எந்த சொத்தும் வாங்கவில்லை. பழைய தேர்தல் வேட்பு மனுவை வைத்து இவ்வாறு பொய்யான செய்தியை வேண்டுமென்றே பரப்புகின்றனர். சுக்விந்தர் சிங் சுகு, ஹிமாச்சல் முதல்வர், காங்.,மிரட்டப்படும் ஆலைகள்! பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, இ - 20 எரிபொருளை திட்டமிட்டு திணிக்கின்றது. இதனால், 2023க்கு முன் தயாரிக்கப்பட்ட, 3 கோடி வாகனங்கள், காயலான் கடைக்கு போக வேண்டிய நிலையில் உள்ளன. ஆலைகளை மூடுவோம், அமலாக்கத் துறை சோதனை வரும் என, வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிரட்டப்படுகின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி கட்சிஅரசியல் லாபம்! எங்களுடைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை, தாங்கள் செய்ததாக ஆந்திராவில் ஆளும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கூறுகிறது. மற்றொருவர் திட்டங்களை தான் செய்ததாக அரசியல் லாபம் தேடுவதுதான் சந்திரபாபு நாயுடுவின் பாணி. ஜெகன்மோகன் ரெட்டி தலைவர், ஒய்.எஸ்.ஆர்.காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !