உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏற்புடையதல்ல!

ஏற்புடையதல்ல!

அமெரிக்க பயணத்துக்கு வேண்டுமென்றே மத்திய அரசு அனுமதி மறுத்ததாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டுகிறார். முதலில், அமெரிக்காவில் அவர் யாரை சந்திக்க இருந்தார்; எதற்காக சந்திக்க இருந்தார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதை விடுத்து, மத்திய அரசு மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. ராமசந்திர ராவ் தெலுங்கானா மாநில தலைவர், பா.ஜ.,

எச்சரிக்கை மணி!

மத்திய அரசு விழிப்புடன் இல்லாவிட்டால், எல்லையில் சீன ராணுவத்தின், 'ரோபோ'க்களுடன் மோத வேண்டிய நிலை வரலாம். மனித உருவ ரோபோக்களை சீனா உருவாக்கி வருவது நமக்கு ஒரு எச்சரிக்கை மணி. தொழில்நுட்ப போட்டியில், நாம் சீனாவை விட எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது. மணீஷ் திவாரி லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்

ராகுல் தான் ரோபோ!

முதலில், சீன எல்லையிலும், சர்வதேச எல்லைகளிலும் காங்கிரசின் மனநிலையை எதிர்த்து நாம் போராட வேண்டும். ஏனெனில், நம் எதிரிகளுக்கு துணை நிற்பவர்களும், தவறான தகவல்களை பரப்புபவர்களும் அக்கட்சியினர் தான். சீனாவின் ரோபோ போல லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தான் செயல்படுகிறார். சம்பித் பத்ரா லோக்சபா எம்.பி., - பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை