உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாத தாக்குதலில் திருமணமான 5 நாளில் கடற்படை அதிகாரி உயிரிழப்பு; குடும்பத்தினர் சோகம்!

பயங்கரவாத தாக்குதலில் திருமணமான 5 நாளில் கடற்படை அதிகாரி உயிரிழப்பு; குடும்பத்தினர் சோகம்!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வாலும் ஒருவர். ஏப்ரல் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டு மனைவி உடன் சுற்றுலா வந்த இடத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால் கொல்லப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. 26 வயதான இவருக்கு ஏப்ரல் 16ம் தேதி திருமணம் நடந்ததுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

யார் இந்த வினய் நர்வால்

* வினய் நர்வால் கொச்சியில் இந்திய கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வயது 26.* இவர் ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் உள்ள பூஸ்லி கிராமத்தில் பிறந்தார். * இவரது தந்தை ராஜேஸ் நர்வால் பானிபட்டில் உள்ள ஜி.எஸ்.டி., துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார்.* ஏப்ரல் 19ம் தேதி கர்னல் மாவட்டத்தில் நடந்த திருமணத்தில் குடும்பத்தினர் கடைசியாக தம்பதியினருடன் நேரத்தை செலவிட்டனர்.* திருமணத்திற்குப் பிந்தைய விடுமுறைக்காக நர்வாலும் அவரது மனைவியும் பஹல்காம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் பிற பகுதிகளுக்குப் புறப்பட்டனர்.* திருமணம் செய்து கொண்டு மனைவி உடன் சுற்றுலா வந்த இடத்தில் , நர்வால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. * நர்வாலின் மார்பு, கழுத்து மற்றும் இடது கையில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். நர்வாலுக்கு ஒரு தங்கை உள்ளார். * இந்திய கடற்படை அதிகாரி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் விடுப்பில் இருந்தபோது கொல்லப்பட்டதை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். கர்னல் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும், அந்த அதிகாரியின் மரணத்தை உறுதிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

எஸ் எஸ்
ஏப் 23, 2025 15:21

அந்த பெண் கணவர் சடலம் அருகே அழக்கூட தோன்றாமல் பிரமை பிடித்தது போல் அமர்ந்து இருக்கும் காட்சி மனதை பிசைகிறது. ராணுவம் இறந்தவர்களின் தகனத்திற்குள் கொன்ற நால்வரையும் தேடி கொல்ல வேண்டும்.


xyzabc
ஏப் 23, 2025 11:43

Very sad to hear this. May the family get strength and courage.


Sankare Eswar
ஏப் 23, 2025 10:29

காஷ்மீர் இந்தியாவின் உறுப்பு என்று பிதற்றினால் மட்டும் போதாது. காஷ்மீர் இன்றும் பக்கி பாகிஸ்தான் கூலி பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ள பகுதியாகவே உள்ளது. மிகவும் ஆபத்தான சூழ்நிலை இருக்கக்கூடிய பகுதியில் சுற்றுலா பயணியர் அனுமதிக்க பட்டிருக்கக்கூடாது அல்லது உரிய பாதுகாப்பு அளித்திருக்கவேண்டும். இது முழுக்க அரசின் தோல்வியே... அரசின் பாதுகாப்பு அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பலியானானது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வேதனைக்குரிய விஷயம்.


தத்வமசி
ஏப் 23, 2025 10:54

பயங்கரவாத அமைப்புகள் துடிப்புடன் இருந்த காலங்களில் கூட சுற்றுலா பயணிகளை அவர்கள் தாக்கியது கிடையாது. நானும் காஷ்மீர் சென்று வந்துள்ளேன். சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் செல்ல இயலும். மற்ற இடங்களில் அனுமதி கிடையாது, பாதுகாப்பும் கிடையாது. சுற்றுலா இல்லையென்றால் அங்கிருப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறி. இது அனைவருக்கும் தெரியும். இந்த தாக்குதல் புதிய முறையாக உள்ளது. சோத்துக்கு வழி இல்லையென்றாலும் பாகிஸ்தானுக்கு கொழுப்பு அதிகம்.


Nellai tamilan
ஏப் 23, 2025 10:02

இஸ்ரேல் செய்வதை போல எதிரிகளை அழிக்கும் பொழுது கருணை காட்டாமல் வேரடி மண்ணோடு அழிக்க வேண்டும். உண்ட வீட்டிற்கு துரோகம் செய்யும் வஞ்சகர்கள் இவர்கள்.


Sampath Kumar
ஏப் 23, 2025 09:09

திருமணம் அனா 5 நாளில் மரணம்....


Gopal
ஏப் 23, 2025 08:42

பாக்கிஸ்தான் நாட்டை ஒரேடியாக அழித்து விட வேண்டும். இந்தியா அதை அழித்து நம் நாட்டுடன் இணைத்து கொள்ள வேண்டும். அதோடு காங்கிரஸ் கட்சியையும் ஒழித்து கட்ட வேண்டும்.


புதிய வீடியோ