உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சல் முகாம் ஒடிசாவில் தகர்ப்பு

நக்சல் முகாம் ஒடிசாவில் தகர்ப்பு

புவனேஸ்வர்: ஒடிசா வனப்பகுதியில் ரகசியமாக செயல்பட்ட, நக்சல் முகாமை கண்டுபிடித்து அழித்த போலீசார், அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களையும் பறிமுதல் செய்தனர்.ஒடிசாவின் நவ்பாடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்., 30ல் போலீசார் இரண்டு சிறப்பு பிரிவுகளாக பிரிந்து, அங்குள்ள பத்தரா மற்றும் சுனாபேடா வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நீடித்த தேடுதல் வேட்டையில், வனப்பகுதியையொட்டிய பஹதுார்பானி கிராமத்தில் செயல்பட்ட நக்சல் முகாமை கண்டறிந்து தகர்த்தனர்.அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 டெட்டனேட்டர்கள், ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் நக்சல் தொடர்புடைய புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ