உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ் துப்பாக்கிகளை பறித்து சென்ற நக்சல்

போலீஸ் துப்பாக்கிகளை பறித்து சென்ற நக்சல்

சுக்மா,: சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தின் ஜாகர்குண்டா கிராமத்தில், உள்ளூர் மார்க்கெட் இயங்கி வருகிறது.நக்சல் ஆதிக்கம் மிகுந்த இந்த பகுதியில் கர்த்தம் தேவா, சோதி கண்ணா ஆகிய இரண்டு கான்ஸ்டபிள்கள் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஐந்து பேர் அடங்கிய நக்சல் கும்பல், சாதாரண மக்கள் போன்று உடையணிந்தபடி மார்க்கெட்டிற்குள் நுழைந்து, இரண்டு போலீசாரையும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதுடன், அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகளையும் பறித்துச் சென்று தப்பியோடினர். படுகாயமடைந்த போலீசார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய நக்சல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி