உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்சிபி எம்எல்ஏ சர்ச்சை பேச்சு: பதிலளிக்க அஜித்பவார் நோட்டீஸ்

என்சிபி எம்எல்ஏ சர்ச்சை பேச்சு: பதிலளிக்க அஜித்பவார் நோட்டீஸ்

மும்பை: தீபாவளிப் பொருட்களை ஹிந்து வியாபாரிகளிடமிருந்து வாங்க வேண்டும் என்று என்சிபி(அஜித்பவார் அணி) எம்எல்ஏ சங்க்ராம் ஜக்தாப், பதிலளிக்குமாறு கட்சியின் தலைவர் அஜித் பவார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.அஜித்பவார் அணியின் எம்எல்ஏ,வாக உள்ள சங்க்ராம் ஜக்தாப் 40, கடந்த வாரம், பொதுமக்களுடன் பேசும்போது, தீபாவளிப் பொருட்களை வாங்கும்போது நீங்கள் ஹிந்து வியாபாரிகளிடமிருந்து வாங்க வேண்டும் என்று கூறியது சர்சைக்கு வழிவகுத்தது. அவரது பேச்சுக்கு எதிர்கட்சி தலைவர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.அதனை தொடர்ந்து, என்சிபி தலைவர் அஜித்பவார், சங்க்ராம் ஜக்தாப்பிற்கு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளதாவது:மதச்சார்பற்ற அரசியல் பிம்பத்தையும், சாதி மற்றும் மத சமூகங்களுக்கு அப்பாற்பட்ட வாக்காளர் தளத்தையும் கட்சி நம்பியிருக்கும் நிலையில், சங்க்ராம் ஜக்தாப் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது, அது முற்றிலும் தவறானது, இந்தக் கருத்துக்கள் கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிரானவை. கட்சி அதை பொறுத்துக்கொள்ளாது என்று குறிப்பிட்டிருந்தார்.எம்எல்ஏவின் பதிலை பொறுத்து எடுக்கப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ