உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு மழை தந்த பட்டினி! ஆந்திராவில் ஹெலிகாப்டர்களில் வரும் உணவு

ஒரு மழை தந்த பட்டினி! ஆந்திராவில் ஹெலிகாப்டர்களில் வரும் உணவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது.ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை, மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக புரட்டி போட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா நகரம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.50 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பை ஏற்படுத்திய மழை, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. 4 லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க, கிட்டத்தட்ட 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.எங்கும் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கும் பகுதிகளில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு, முடுக்கிவிட்டார். இந் நிலையில் கடற்படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டரில் சென்று உணவை விநியோகித்து வருகின்றனர்.பல பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் வந்து செல்வதை பார்க்கும் மக்கள் உணவுக்காக காத்திருக்கும் காட்சிகள் பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மீட்புப்புணிகளை விரைவுப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் மீட்டு அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
செப் 03, 2024 12:14

சில வாரங்களுக்கு முன்பு கேரளாவின் வயநாடு. இப்பொழுது ஆந்திரா, தெலங்கானா. நாளை ? எங்கும் வேண்டாம் விபரீதம். ஆனால் இயற்கை கேட்குமா நம் கோரிக்கையை. கேட்காது. நாளை வேறு ஒரு மாநிலம் அவதிக்குள்ளாகலாம். ஏன் இந்த வன்மபுத்தி இயற்க்கைக்கு? ஏன் என்றால், இயற்கையை நாம் அழித்தோம். இப்பொழுது இயற்கை நம்மை பழிவாங்குகிறது? என்ன செய்யவேண்டும்? இயற்கையை அழிக்காதீர்கள். பேணிப்பாதுகாக்கவும். ஏறி, குளம், குட்டை, ஆறு இவற்றை அழித்து வளர்ச்சி என்கிற பெயரில் அவைகளை அழிக்காதீர்கள். மரங்களை, காடுகளை அழிக்காதீர்கள். நீர்நிலைகளை அழிக்காதீர்கள் மாறாக இருக்கும் காடுகளை அழிக்காமல் பாதுகாக்கவும். நீர்நிலைகளை அழிக்காமல் பாதுகாக்கவும்.


சமீபத்திய செய்தி