உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓடிடி தளங்களை முறைப்படுத்த வேண்டியது அவசியம்; மோகன் பாகவத் வலியுறுத்தல்

ஓடிடி தளங்களை முறைப்படுத்த வேண்டியது அவசியம்; மோகன் பாகவத் வலியுறுத்தல்

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த விஜயதசமி விழாவில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு; இந்த பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பதே நமது பாரம்பரியப் பண்பாகும். கடந்த ஓராண்டாக, நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்வுகளின் நிறைவாக, விஜயதசமியைக் கொண்டாடுவதற்காக நாம் இன்று இங்கே கூடியுள்ளோம். உலக அளவில் இந்தியா பெரும் வளர்ச்சி பெற்ற நாடாக உருவாகி வருகிறது. வரும் தலைமுறையினர் வளர்ந்த பாரதத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். பாரத மாதாவே அனைத்திலும் முதன்மை; அதிகாரப்போட்டி அழிவை ஏற்படுத்தும். மேற்கத்திய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பிரான்ஸ், அல்பேனியா, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஆட்சியைக் மாற்றினால் நிலைமை மாறிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி நடக்காது. அதிகாரம்கொண்ட ஹிந்து சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று பேசுவது, நாட்டின் ஒற்றுமைக்கோ எந்த வகையிலும் முரணானது அல்ல. இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒன்றே; இந்தியா நமக்கு எதைக் கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி, நம்மிடம் உள்ள அனைத்தும் இந்தியாவுக்கே உரியவை. ஓடிடி தளங்களில் வெளியாகும் கண்டன்ட்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்; இளைஞர்கள் அதனை அப்படியே நம்பி பார்க்கின்றனர். கடந்த 100 ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட பணிகள், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Makkal Manam
அக் 20, 2026 19:23

பட்டியல் குடுத்தா மட்டும் அப்படியே படிச்சு தள்ளிடுவ நீ


Apposthalan samlin
அக் 20, 2026 16:24

rss நாட்டுக்கு என்ன நல்லது செய்தது பட்டியல் கொடுத்தால் நலமாக இருக்கும்


RK
அக் 20, 2026 13:35

இந்தியாவின் தேச பக்தர்கள் ஆர்எஸ்எஸ். வல்லரசு நாடாக வளர்ந்துவரும் இந்தியா பன்முகத்தன்மையை மாற்றாமல் இருக்க இவர்களின் அர்ப்பணிப்பு உலகம் அறியும்.


அசோகன்
அக் 20, 2026 11:51

RSS போன்ற தேச பக்தர்களை பாரதம் பெற்றதாலேயே உலகின் சிறந்த நாடாக இந்தியா உருவாக்கியுள்ளது


அம்பி ஐயர்
அக் 20, 2026 11:49

ஓடிடி தளங்கள் மட்டும் அல்ல..... இப்போதெல்லாம் நிறைய ஆப்கள் வெப் சீரிஸ் தொடர் ரீல்ஸ் என ஏகப்பட்டது அதுவும் 18+ ன்னு வருது... ஏகப்பட்ட விளம்பரம்.... கொஞ்சம் மனசு சலனப்பட்டாலும் போதும் மனம் உடல் பணம் என எல்லாமே நஷ்டம்... இதைத் தடுக்க வேண்டும்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை