சக்தியின் அம்சமாக விளங்கும் வேப்ப மரம்
வேப்பிலை தெய்வ அம்சம் கொண்டதாகும். கதக்கில் அதிசய வேப்ப மரம் உள்ளது. இதில் சக்தி தேவதை குடிகொண்டுள்ளதாக பக்தர்கள் நம்புகின்றனர்.கதக், ரோணாவில் இருந்து 2 கி.மீ., தொலைவில், ஜிகளூரா கிராமத்துக்குச் செல்லும் சாலையில், துர்க்காதேவி கோவிலுக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வேப்பமரம் ஒன்று உள்ளது. மற்ற வேப்பமரங்களுடன் ஒப்பிட்டால், இந்த மரம் மிகவும் அபூர்வமானது. இதன் காய்கள் செண்டுப்பூ போன்று தென்படுகின்றன.இதற்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த அரச குடும்பத்தினர், தங்களின் கோட்டை, அரண்மனை வளாகத்தில் இத்தகைய வேப்பமரம் வளர்த்ததாக கூறப்படுகிறது. இவற்றை அரச குடும்பத்தினர், பக்தியுடன் பூஜித்தனர்.வேப்ப மரத்தை சக்தியின் சொரூபமாக பார்த்தனர். நவ துர்க்கைகள் குடிகொண்ட தெய்வீக மரமாகும் மஹாநவமியில் மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.அரசர்கள் போருக்கு சென்றபோது, அவர்களின் தாய் அல்லது மனைவியர், நவ துர்க்கைகள் நிலைத்துள்ள வேப்ப மரத்தை பூஜித்து, ஆரத்தி எடுத்து போரில் வெற்றி கிடைக்க வேண்டும் என, வேண்டுதல் வைப்பர்.அரச குடும்பத்தினர், எந்த மங்கள நிகழ்ச்சிகள் நடத்தினாலும், முதலில் வேப்ப மரத்துக்கு பூஜை செய்வர். வடக்கு மற்றும் தென்னகத்தில் இது போன்ற மரங்களை காண்பது மிகவும் அபூர்வம்.தென்னாப்பிரிக்காவில் வளரும் லெமேடியா கர்குன்யு என்ற மரத்தின் இலைகளை போன்றுள்ள, இந்த வேப்பமரம், இந்தியாவில் அவ்வளவாக பார்க்க முடியாது. ஆப்பிரிக்காவின் உஷ்ணமான பகுதிகளில் வளரும். மிக அதிகமான ஆக்சிஜனை அளிக்கும் மரமாகும். எனவே வேப்பமரத்தை அரச குடும்பத்தினர், சக்தியின் வடிவமாக பார்த்தனர்.இத்தகைய அபூர்வ மரம், ஜகளூரா கிராமத்தின் அருகில் உள்ளது. அரச குடும்பத்தினர் வளர்த்த மரம் என்பதால், அரச வேப்பமரம் என்றே அழைக்கின்றனர். பக்தர்கள் தினமும் மரத்துக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர். சுற்றுப்புற மக்களும் வேப்பமரத்தை பார்த்துச் செல்கின்றனர். - நமது நிருபர் -