UPDATED : ஜூலை 04, 2025 10:13 AM | ADDED : ஜூலை 04, 2025 09:56 AM
பெங்களூரு: ஒலிம்பிக் மற்றும் நடப்பு உலக சாம்பியனான இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற உலகின் நம்பர் ஒன் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, கர்நாடகா வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை ( ஜூலை 5 ஆம் தேதி) பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் கிளாசிக் 2025 ஈட்டி எறிதல் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க நீரஜ்சோப்ரா பெங்களூரு வந்தார்.நீரஜ் சோப்ரா, முதல்வர் சித்தராமையாவை அவரது காவேரி இல்லத்திற்கு சென்று சந்தித்தார். இவரை முதல்வர் கவுரவித்தார். ' நீரஜ் சோப்ராவின் விளையாட்டு வாழ்க்கையில் மேலும் வெற்றிபெற முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்'. இவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். https://twitter.com/CMofKarnataka/status/1940668338457465236
எனக்கு மிகவும் பிடிக்கும்
நிருபர்களிடம் பேசிய நீரப்சோப்ரா கர்நாடகாவை மறக்க முடியாதது ' 2016-17 ஆம் ஆண்டில் இங்கு 5-6 மாதங்கள் பயிற்சி பெற்றதாகவும், இங்குள்ள காலநிலையையும் மக்களையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறினார். கர்நாடக ஒலிம்பிக் பாராட்டு
நீரஜ் சோப்ராவை கர்நாடக ஒலிம்பிக் சங்கம் கௌரவித்துள்ளது.கர்நாடகாவின் விளையாட்டு சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில், கண்டீரவா மைதானத்திற்கு அருகிலுள்ள ஒலிம்பிக் அமைப்பு அலுவலகத்தில், ஹால் ஆப்பேம் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.இங்கு முதல் முறையாக, கர்நாடகாவிற்கு வெளியே இருந்து வந்த ஒரு விளையாட்டு வீரரின் சாதனைகளை விவரிக்கும் புகைப்படம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.