உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்; மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை!

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்; மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரைத்துள்ளது. இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, பயிற்சி மையங்களில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது என பல சர்ச்சைகள் எழுந்தன. மாணவர்கள் தரப்பிலும், பெற்றோர்கள் தரப்பிலும் இதுபோன்ற நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந் நிலையில் நீட் முறைகேடு என்று தொடரும் குற்றச்சாட்டுகள், தேர்வின் போது நடந்த மோசடி ஆகியவற்றை தடுக்கும் வகையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வின் சீர்திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை அளிக்க பணிக்கப்பட்டது. இந்த குழு நீண்ட ஆய்வு நடத்தி தனது பரிந்துரைகளை மத்திய கல்வி அமைச்சகத்திடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது.அந்த பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு; நீட் நுழைவுத்தேர்வை முடிந்தவரை ஆன்லைன் மூலம் நடத்தலாம். நீட் தேர்வு மையங்களை அவுட்சோர்சிங் என்ற முறையில் வழங்காமல் அதன் சொந்த தேர்வு மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்து நடத்தலாம்.ஆன்லைன் முறை சாத்தியம் இல்லை எனும் போது, வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் தேர்வர்களுக்கு அனுப்பலாம். அவர்கள் கேள்விகளுக்கான பதில்களை ஓ.எம்.ஆர். விடைத்தாளில் குறிப்பிடலாம். இதன் மூலம் விடைத்தாள்கள் பலரின் கைகளுக்கு செல்வது தடுக்கப்படும் அல்லது கணிசமாக குறைக்கப்படும். எத்தனை முறை தேர்வில் பங்கேற்பது என்ற கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம். ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ்டு உள்ளிட்ட நுழைவுத் தேர்வை போலவே அதிகம் பேர் நீட் தேர்வை எழுதுவதால் பல நிலைகளில் இந்த தேர்வை நடத்தலாம். இவ்வாறு கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

veeramani
அக் 31, 2024 09:40

NEET தேர்வு ஆன்லையில் நடத்துவது சரியில்லை. மெட்ரோ சிட்டிகளில் தொடர்பு அருமையாக இருக்கும் சிறு நகரத்தில் ஸ்பீட் குறைவாக இருக்கும். உடனடியாக கோர்ட் படியேற அனைவரும் முயல்வர். இன்றும் CSIR JRF எக்ஸாம் நடத்திடுவது போல் நடத்தலாம். ஒரே கேள்வி ஆனால் மாற்றி மாற்றி பிரிண்ட் செய்து ABC D என பிரிண்ட் செய்திருக்கும் .இதற்கு அஙஸ்வீர் ஷீட்டில் பென்சில் வைத்து ஷ்டே பண்ணவேண்டும். இதனால் யாருக்கு என்ன கேள்வி என நிச்சசய தெரியாது. கம்ப்யூட்டரை வைத்து திருத்தும் பொது சரியான அன்செர் ஷீட்களை கொடுத்தால் போதுமானது. இதனால் கேள்வித்தாள்களும் எக்ஸாம் செண்ட்டரை விட்டு வெளியில் செல்லாது பின்னர் பிரச்சினை என்றால் கோர்ட்டிலும் காண்பிக்கமுடியும் இதுவே சரியான வழி


தாமரை மலர்கிறது
அக் 30, 2024 20:28

மிக அருமையான பரிந்துரை.


GMM
அக் 30, 2024 18:53

ஆன் -லைன் தேர்வு நேர கட்டுப்பாடு இருக்கும். கம்ப்யூட்டர், இன்டர்நெட் பொறுத்து வேகம் மாறுபடும். சில நேரம் நின்றுவிடும். மாற்று ஏற்பாடு? கம்ப்யூட்டர் எண், இன்டர்நெட் சேவை எண்ணுக்கு மட்டும் தொடர்பு பாதுகாப்பு தருமா ? பிரைவேட் இன்டர்நெட் தொடர்பு பாதுகாப்பு தருமா ? கம்ப்யூட்டர் பொறியாளரிடம் சந்தேகம் தீர்க்க வேண்டும்.


J.Isaac
அக் 30, 2024 18:16

ஆன்லைனிலும் மோசடிகள் ஆரம்பித்துவிட்டதே.


J.Isaac
அக் 30, 2024 18:11

உண்மையாகவே எழுதியது ஆரூர் தானா என ஆச்சரியமாயிருக்கிறது.


ஆரூர் ரங்
அக் 30, 2024 18:58

வெள்ளந்தியா இருக்கீங்க. கிண்டல இப்படியும் புரிஞ்சிக்கலாமா?


Suppan
அக் 30, 2024 16:58

தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும்பொழுது வேறு வழிமுறைகளைக் கையாளுகிறார்கள். வெப்கேம் உபயோகப்படுத்தப்படும். இதற்காக கேள்வி வங்கி உருவாக்கப்படுகிறது. கேள்விகள் கலைந்த ராண்டம் முறையில் திரையில் வரும். தேர்வு முடிந்தவுடனேயே முடிவும் தெரிந்துகொள்ளலாம்.


Natarajan P
அக் 30, 2024 16:08

Yes.. the Election Commission of India can conduct the Loksabha Election and State Assembly Election also through online mode.


duruvasar
அக் 30, 2024 15:56

முரசொலி தவறாமல் படித்தால் நீட் தேர்வை எளிதாக வெல்லலாம். இட்லி கடை ஆயாகூட சுளுவா எழுதலாம். முரட்டு முட்டு மாதேஷிடம் விவரம் கேட்டு பலனடையலாம்


S Ramkumar
அக் 30, 2024 15:15

இல்லை. கூடாது. பல லட்சம் பேர் எழுதுவார். அனைவருக்கும் வசதி செய்து தர முடியாது. வீட்டில் உட்கார்ந்து கொண்டு எழுதவும் முடியாது. போர்ஜரிக்கு வழி வகுக்கும்.


ஆரூர் ரங்
அக் 30, 2024 15:07

பாவம். எம்பிபிஎஸ் படித்துவிட்டு மக்கள் சேவை செய்வதற்கே பிறந்த இளைய சமுதாயத்தை இப்படி வாட்டலாமா? (மற்ற படிப்புகள் படிப்பபுக்களே அல்ல) . எனவே சயின்ஸ் கேள்விகளை விட்டுவிட்டு சமூகசேவை பற்றிய கேள்விகளை மட்டுமே கேளுங்கள்.