உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேரு தற்செயலாக பிரதமரானார்: சொல்கிறார் மனோகர் லால் கட்டார்

நேரு தற்செயலாக பிரதமரானார்: சொல்கிறார் மனோகர் லால் கட்டார்

புதுடில்லி: 'ஜவஹர்லால் நேரு தற்செயலாக நாட்டின் முதல் பிரதமரானார்,' என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறினார்.ஹரியானாவின் ரோதக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் மனோகர் லால் கட்டார் பேசியதாவது:ஜவஹர்லால் நேரு தற்செயலாக நாட்டின் முதல் பிரதமரானார், அந்த பதவிக்கு தகுதியானவர்கள் சர்தார் வல்லபாய் படேல் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆவர்.அரசியலமைப்பு நமது புனித நூல், அதை வடிவமைப்பதில் அம்பேத்கரின் பங்களிப்பை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். டாக்டர் அம்பேத்கரும் சிரமங்களை எதிர்கொண்டார், உதாரணமாக, அவரது மரணத்திற்குப் பிறகு, டில்லியில் அவருக்கு தகனம் செய்ய இடம் வழங்கப்படவில்லை. மத்திய பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, அம்பேத்கரின் பெயருடன் தொடர்புடைய ஐந்து இடங்கள் புனித தலமாக நிறுவப்பட்டது.பிப்ரவரி 5ம் தேதி டில்லியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பா.ஜ., வெற்றி பெறும்.'இந்த முறை, கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சி டில்லியில் அரசு அமைக்க முடியாது. பா.ஜ.,வேகம் பெற்று வருகிறது.இவ்வாறு கட்டார் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !