உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சட்டசபையில் புதிய சாட் பாட் சபாநாயகர் அறிமுகம்

 சட்டசபையில் புதிய சாட் பாட் சபாநாயகர் அறிமுகம்

புதுடில்லி:டில்லி சட்டசபையின் செயல்பாடுகளை, உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக, செயற்கை நுண்ணறிவு வாயிலாக செயல்படும், சாட் பாட் எனும் கொள்கை விளக்கும் தொழில்நுட்பத்தை, சட்டசபை சபாநாயகர் விஜேந்தர் குப்தாஅறிமுகம் செய்தார். கியு.ஆர்.கோடு எனும் மொபைல் போனில் உள்ள ஸ்கேனர் கருவி வாயிலாக செயல்படும், இந்த சாட் பாக்ஸ், இப்போது, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில், உறுப்பினர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும். இதுகுறித்து, சட்டசபை சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறும் போது,''நாட்டிலேயே முதல் மாநிலமாக, செயற்கை நுண்ணறிவு வாயிலாக, உறுப்பினர்களுக்கு தேவையான சட்டசபை தகவல்களை வழங்கும் சாட் பாக்ஸ், டில்லி சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார். டில்லி சட்டசபை கூட்டம், வரும், 23ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை