உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக கவர்னராக ரோசய்யா வரும் 31ம் தேதி பதவியேற்பு

தமிழக கவர்னராக ரோசய்யா வரும் 31ம் தேதி பதவியேற்பு

ஐதராபாத் : தமிழக கவர்னராக, கே.ரோசய்யா, வரும் 31ம் தேதி பதவி ஏற்கிறார். தமிழக கவர்னராக உள்ள சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய கவர்னராக ரோசய்யா அறிவிக்கப்பட்டுள்ளார். ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு ரோசய்யா முதல்வராக பதவி ஏற்றார்.

ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் தொடர் யாத்திரை, தெலுங்கானா கலவரம் போன்ற சம்பவங்களால் பிரச்னையை சமாளிக்க முடியாமல் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். தற்போது தமிழக கவர்னராக ரோசய்யாவை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அறிவித்துள்ளார். இதையடுத்து வரும் 31ம்தேதி, ரோசய்யா, கவர்னராக பொறுப்பேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை