உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதற்கும், யாருக்கும் அஞ்ச மாட்டோம்! மோடி சபதம்

எதற்கும், யாருக்கும் அஞ்ச மாட்டோம்! மோடி சபதம்

தார் : “அணு ஆயுதம் உள்ளிட்ட எந்த தாக்குதலுக்கும், எதற்கும், யாருக்கும் புதிய இந்தியா அஞ்சாது,” என, தன் 75வது பிறந்த நாளில் பிரதமர் மோடி சபதம் செய்துள்ளார். மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், 2,200 ஏக்கரில் அமைய இருக்கும் நாட்டின் மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை பூங்காவுக்கு பிரதமர் நேற்று அடிக்கல் நாட்டினார். பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 'ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார்' மற்றும் '8வது ராஷ்ட்ரிய போஷன் மா' பிரசாரங்களை மோடி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தான் பயங்கரவாதிகள், நம் சகோதரிகள் மற்றும் மகள்களின் குங்குமத்தை அழித்தனர். இதற்கு பதிலடியாக, அவர்களின் வசிப்பிடத்துக்கே சென்று பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. துணிச்சலான நமது வீரர்கள், பாகிஸ்தானை மண்டியிட வைத்தனர். முன்பு, நம் நாட்டுக்குள் புகுந்து அச்சுறுத்தும் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது, அவர்களையே தேடிச் சென்று அழிக்கிறோம். ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில், நம் வீரர்கள் திறம்பட பணியாற்றினர். ஒரு பயங்கரவாதி கண்ணீர் சிந்தியபடி, தங்கள் அவல நிலையை சமூக ஊடகத்தில் விவரித்ததை உலகமே பார்த்தது. பயங்கரவாதிகளின் தளங்கள் அழிக்கப்பட்டதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.இது புதிய இந்தியா. அணு ஆயுதம் உள்ளிட்ட எந்தவித தாக்குதலுக்கும் அஞ்சாது. எதற்கும், யாருக்கும் பயப்படாது. ஒவ்வொரு குடிமகனும், நாட்டுக்காக தன்னை அர்ப்பணிக்க வேண்டும். வரும் 2047ல், வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைய வேண்டும் என்றால், சுயசார்பு இந்தியா திட்டத்தை நாம் அவசியம் பின்பற்ற வேண்டும். இந்த பண்டிகை காலத்தில், சுதேசி மந்திரத்தை நினைவில் கொண்டு, நம் வாழ்வில் இணைக்க வேண்டும். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும் இந்திய தயாரிப்பாக இருக்க வேண்டும். அந்தப் பொருட்களின் உற்பத்திக்கான பின்னணியில், இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

தலையீடை ஏற்க மாட்டோம்

நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்த ஹைதராபாத், நம் நாட்டுடன் இணைக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், செப். 17 'ஹைதராபாத் விடுதலை நாள்' என கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, செகந்திராபாதில் நடந்த நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். ”யாரோ ஒருவரின் தலையீட்டால், இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். வெளிநபர் யாரும் இதில் சம்பந்தப்படவில்லை. பாகிஸ்தான் துணை பிரதமர் முகமது இஷாக் தர் இதை உறுதி செய்துள்ளார். மீண்டும் ஏதாவது பயங்கரவாத சம்பவம் நடந்தால், நம் நடவடிக்கை பாயும். எந்த சக்தியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது” என ராஜ்நாத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Nachiar
செப் 18, 2025 16:44

மோடி ஜி உங்கள் தலைமை பாரதத்துக்கு மட்டுமல்ல உலகத்திற்கே இன்னும் பல் ஆண்டுகளுக்குத் தேவை. நீடுழி வாழ இறைவன் அருள் புரிய வேண்டும். ஜெய் ஹிந்


Ganesan
செப் 18, 2025 16:20

சுதந்திர. குடியரசு தினத்தில் கொடியேற்றி சபதம் ஏற்ப்பது வழக்கம். 2025ல் புதிதாக பிறந்த நாள் சபதம். நல்ல முன்னேற்றம். வாழ்த்துக்கள்


Barakat Ali
செப் 18, 2025 13:18

மன்மோகன் ஆட்சி போல இல்லாமல் பாகிஸ்தானை துடை நடுங்க வைப்பார் ....


மாபாதகன்
செப் 18, 2025 16:51

இது வஞ்ச புகழ்ச்சி காமெடி இல்லையே??


baala
செப் 20, 2025 09:44

???????????????


Sangi Mangi
செப் 18, 2025 12:58

அவருக்கு மட்டும் தான் அஞ்சுவோம்,, கெஞ்சுவோம்,, ,


Venugopal S
செப் 18, 2025 12:47

எடுத்த சபதத்தை நிறைவேற்றுபவர் தானே அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்


M Ramachandran
செப் 18, 2025 12:31

அது சரி வெளிநாடுகள் சதி செய்கின்றனவே நம் நாட்டின் அரசய்ய கவிழ்க்க.


baala
செப் 18, 2025 12:18

மக்களுக்கு தெரியும்


Raja
செப் 18, 2025 11:08

வாய்ச்சொல் வீரர் ...


செல்வேந்திரன்,அரியலூர்
செப் 18, 2025 11:52

அந்த திறமை கூட தமிழக தத்தியிடம் இல்லை...


மாபாதகன்
செப் 18, 2025 12:15

என்னத்த சொல்ல?? சவடால் என்றால் என்ன??


Palanisamy Sekar
செப் 18, 2025 06:17

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தியா மீதான எந்த ஒரு தீவிரவாத தாக்குதல்களுக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ராணுவ அமைச்சர் அமெரிக்காவுக்கு உடனே ஓடோடி சென்று புலம்பி அழுதுவிட்டு வருவார் தீர்வு கேட்டு. அதுபோன்ற நிலையெல்லாம் கடந்த பத்தாண்டுகளாக காணாமல் போயிற்று. உடனடி போட்டு தள்ளுவதுதான் தீர்வாக மோடிஜி முடிவெடுத்து சாதித்து காட்டினார். ஆனால் அதெல்லாம் பொய்யி என்று சொல்லி காங்கிரஸ் அதிர்ச்சியில் உறைந்துபோனது உண்மையே. ஆனாலும் இதுபோன்ற இந்தியாவின் தீர செயலை ஏற்காமல் நடைபயணம் மூலம் பொய் பொய் என்று பிரச்சாரம் மேற்கொண்டது. ஆனாலும் உதைபட்ட பாகிஸ்தானே ஒப்புக்கொண்டாலும் காங்கிரஸ் தான் செய்த பொய் பிரச்சாரத்துக்கு பொதுமக்களிடையே மன்னிப்பு கேட்கவே இல்லை. இந்திய மண்ணில் இந்தியனுக்கு பிறந்த யாருக்குமே தேசப்பற்று என்பது ரத்தத்தில் ஊறியிருக்கும். சில ஜென்மங்கள் அதில் விதிவிலக்காக இருந்திருக்கும். பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் ட்ரம்ப் சொல்லிக்கொடுத்தது போல அமெரிக்காவிலிருந்து கொக்கரித்தான். இதுநாள்வரை கப்சிப் என்று இருக்க காரணமே மோடியின் தைரியமான துணிச்சலான நடவடிக்கையில் சீரழிந்த பாகிஸ்தான் அமைதி காத்து தேமேன்னு இருக்கிறது. இன்னோர் முறை தப்பித்தவறி பாகிஸ்தான் சீண்டினால் வரைபடத்தில் பாகிஸ்தான் என்கிற நாடே இல்லாமல் போய்விடும் என்கிற கூற்று அதிகபட்சமாக இருந்தாலும் அந்த அளவுக்கு அடித்து தூள் ஆக்கிடும் வலிமை இந்தியாவுக்கு இருக்கின்றது. காரணம் மேக் இந்தியா திட்டத்திலும் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையும் ராணவத்திடம் பலமான வலிமையையும் இருப்பதால் மோடிஜியின் பிரகடனம் சாத்தியமாகலாம். உறுதியாக செய்தும் காட்டிடும் ஆற்றலும் உள்ளதை பாகிஸ்தான் உணர்ந்தே இருக்கும். என்ன உள்நாட்டில் காங்கிரஸ் ஆடுகின்ற ஆட்டத்தை ஒதுக்காமல் இருப்பதுதான் சற்றே வருத்தத்தை கொடுக்கின்றது நம்போன்ற தேசபக்தர்களுக்கு. மோடியின் சபதம் பாகிஸ்தானுக்கு விடுக்கும் எச்சரிக்கை.


ராமகிருஷ்ணன்
செப் 18, 2025 06:13

இந்த சவால் பாக்கிஸ்தானுக்கு மட்டும் அல்ல உலக நாடுகளுக்கு, முக்கியமாக அமெரிக்காவுக்கு விடப்பட்ட சவால்.


மாபாதகன்
செப் 18, 2025 12:17

நல்ல தமாஷ்


புதிய வீடியோ