உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்

புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

நான்கு புதிய தொழிலாளர்கள் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை தொழிலாளர்கள் நலனுக்காக பிரதமர் மோடி மேற்கொண்ட பெரிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.பல்வேறு துறைகளில் தொழிலாளர் நலனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மிகப்பெரிய நடவடிக்கையாக, இந்தியாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர்கள் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொழிலாளர் நலனுக்காக, பிரதமர் மோடி மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கை ஆகும். நான்கு புதிய சட்டங்களால் நன்மைகள் என்ன?வேலைவாய்ப்பு முறைப்படுத்தல்- அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய நியமனக் கடிதங்கள். எழுத்துப்பூர்வ சான்று வெளிப்படைத்தன்மை, வேலைப் பாதுகாப்பு மற்றும் நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்யும்.சமூகப் பாதுகாப்பு காப்பீடு- அனைத்து தொழிலாளர்களும் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டைப் பெறுவார்கள். அனைத்து தொழிலாளர்களுக்கும் PF, ESIC, காப்பீடு மற்றும் பிற சமூக பாதுகாப்பு சலுகைகள் கிடைக்கும்குறைந்தபட்ச ஊதியம்- அனைத்து தொழிலாளர்களும் சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற வேண்டும் . சரியான நேரத்தில் ஊதியமும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும். மேலும் தொழிலாளர்களுக்காக பல்வேறு நன்மைகள் தரும் வகையில் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க நாள்

இது தொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று எனது உழைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். நமது அரசு தொழிலாளர்கள் நலனுக்காக நான்கு புதிய சட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு தொழிலாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் இது. இது நாட்டின் தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கும். இது விதிமுறைகளுக்கு இணங்குவதை மிகவும் எளிதாக்கும். அதே வேளையில், வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் ஊக்குவிக்கும்.இந்த சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் நமது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும். இது வளர்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தும்.இந்த விதிகள் சமூகப் பாதுகாப்பு, சரியான நேரத்தில் ஊதியம் மற்றும் நமது உழைக்கும் சகோதர சகோதரிகளுக்கு பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்யும். அவை சிறந்த மற்றும் அதிக லாபகரமான வாய்ப்புகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும். நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் இளம் சக ஊழியர்கள் அவற்றால் குறிப்பாக பயனடைவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முக்கிய நடவடிக்கை

'இந்த சீர்திருத்தங்கள் வெறும் சாதாரண மாற்றங்கள் அல்ல, மாறாக தொழிலாளர் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த ஒரு முக்கிய நடவடிக்கை' என மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை