உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அப்டேட்

புதிய காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அப்டேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வளிமண்டல சுழற்சி காரணமாக இந்தியப் பெருங்கடல், தென் கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் இன்று (டிச.,07) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது' என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், நேற்று முதல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.,07) உருவாகலாம்.இது, மேற்கு,- வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 12ம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தமிழகத்தில் டிசம்பர் 11,12ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

எவர்கிங்
டிச 07, 2024 09:41

மத்தியநிதி ஒதுக்கீடு கேட்க/ போராட குற்றம் சொல்ல மீண்டும் தயார் படுத்திக்கோள்ள அவகாசம் தேவை என மன்றாடி கேட்கிறேன் இயற்கையை


Barakat Ali
டிச 07, 2024 09:21

மக்கள் கவனத்தில் இருந்து புயலையும் திசை திருப்ப முடியுமா ? துக்ளக்கார் யோசனை / ஆலோசனை ......


xyzabc
டிச 07, 2024 08:11

இன்னும் எத்தனை பாலங்கள் உடைய போகிறது?


MARI KUMAR
டிச 07, 2024 07:32

மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வா, அய்யோ போச்சா


angbu ganesh
டிச 07, 2024 11:32

எவ்ளோ புயல் வருதோ அவ்ளோ நல்லது நாட்டுக்கு இல்ல முதல்வர் வீட்டுக்கு இப்பவேய் 2000 கோடி கேக்கலாமா இல்ல 3000 கோடி கேக்கலாமான்னு அலைவானுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை