உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரும் 25ல் புதிய மேயர் தேர்தல்

வரும் 25ல் புதிய மேயர் தேர்தல்

பகர்கஞ்ச்:டில்லி மாநகராட்சியின் புதிய மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல், வரும் 25ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி செயலர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, வரும் 25ம் தேதி மாநகராட்சியின் வழக்கமான கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படும். அன்று மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் பிற்பகல் 2:00 மணிக்கு நடத்தப்படும்.வேட்புமனுத் தாக்கல் வரும் 15ம் தேதி தொடங்கும் என்றும், வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 21ம் தேதி.இவ்வாறு மாநகராட்சியின் செயலர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ