உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய ஏவுகணை பார்கவ அஸ்திரம் சோதனை வெற்றி!

புதிய ஏவுகணை பார்கவ அஸ்திரம் சோதனை வெற்றி!

கோபால்பூர் : கொத்து கொத்தாக வரும் ட்ரோன் படைகளை தடுத்து அழிக்கும் திறன் கொண்ட புதிய ஆயுதத்தை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. மிகவும் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆயுதத்துக்கு, 'பார்கவ அஸ்திரம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், பல வகைகளில் நமக்கு பயன்படுகிறது. மனிதர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு விரைவாக செல்லும் என்பதால், இது விவசாயம், மீட்புப் பணிகள், மருத்துவம் என, பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆராய்ச்சி

அதே நேரத்தில், இந்த ட்ரோன் தற்போது ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. குண்டு அல்லது வெடிபொருளை அதில் இணைத்து ஏவினால், இலக்கை நோக்கி பறந்து சென்று, மிகவும் துல்லியமாக தாக்கி அழிக்கும்.ரஷ்யாவுக்கும், உக்ரைன் நாட்டுக்கும் இடையே நடக்கும் போரில், ட்ரோன்கள் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அடுத்தபடியாக பாகிஸ்தானுக்கும், நமக்கும் நடந்த மோதலில், ஆசியாவில் முதல் முறையாக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. அணுகுண்டுகள் வைத்துள்ள இரண்டு நாடுகளுக்கு இடையில் நடந்த ட்ரோன் யுத்தம் என்பதால், உலகம் முழுதும் அதை உன்னிப்பாக கவனித்தது.தனித்தனி ட்ரோன்களாக ஏவினால், அவை பறக்கும்போதே இந்தியா குறிவைத்து தாக்கி அழித்து விட்டதால், கொத்து கொத்தாக ட்ரோன்களை ஏவியது பாகிஸ்தான். ஒரே நேரத்தில், 300க்கு மேற்பட்ட ட்ரோன்களை இந்திய எல்லைக்குள் உள்ள இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் அனுப்பியது. அப்படி இருந்தும், ஏவுகணைகள் அனுப்பி அந்த ட்ரோன்களை இந்தியா துவம்சம் செய்தது. இருப்பினும், விலை குறைந்த ட்ரோன்களை அழிப்பதற்காக, எக்கச்சக்க விலையுள்ள ஏவுகணைகளை பயன்படுத்த நேர்கிறதே என பல நாடுகள் கவலைப்பட்டன. இந்தியாவும் அந்த எண்ணத்தில் பல ஆண்டுகளாக தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது.

நீதியின் ஆயுதம்

அதன் விளைவாக, இப்போது ட்ரோன்களை அழிப்பதற்கு மிகவும் குறைந்த செலவிலான ஆயுதத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள எஸ்.டி.ஏ.எல்., எனப்படும் 'சோலார் டிபன்ஸ் அண்டு ஏரோஸ்பேஸ் லிமிடெட்' என்ற நிறுவனம், இந்த ஆயுதத்தை வடிவமைத்துள்ளது.முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான இதற்கு, பார்கவ அஸ்திரா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.மஹாபாரதத்தில் கர்ணனுக்கு, பரசுராமன் வழங்கிய அஸ்திரமே பார்கவ அஸ்திரம். அந்த பெயரே, இந்த ஆயுதத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. தர்மத்தை பாதுகாக்க பயன்படுத்தப்படும் நீதியின் ஆயுதமாக இது சித்தரிக்கப்படுகிறது.ஏற்கனவே, ஜனவரியில் இந்த ஆயுதம் சோதித்து பார்க்கப்பட்டது. மீண்டும், ஒடிஷாவின் கடலோரம் உள்ள கோபால்பூர் சோதனை மையத்தில் இருந்து, இது நேற்று ஏவப்பட்டது; இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

குறு ஏவுகணை

இது, வழக்கமான ஏவுகணைகளின் அளவை விட மிகவும் சிறியது. அதனால், குறு ஏவுகணை அல்லது மினி மிஸைல் என்கின்றனர். ஒரே நேரத்தில் கூட்டம் கூட்டமாக வரும் ட்ரோன்களை அழிப்பதற்காக, இந்த ஏவுகணைகளை அதிக எண்னிக்கையில் செலுத்த முடியும்.விமானப்படை உயர் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நடந்த சோதனை வெற்றிகரமாகவும், துல்லியமாகவும் அமைந்ததாக ராணுவம் தெரிவித்தது.

சிறப்பம்சம்!

பூமியில் இருந்து இரண்டரை கி.மீ., உயரம் வரை பறந்து வரும் ட்ரோன்களை, பார்கவ அஸ்திரத்தால் தாக்கி அழிக்க முடியும். ஒரே நேரத்தில், 64 குறு ஏவுகணைகளை, ஒரே வாகனத்தில் இருந்து அனுப்ப முடியும். எந்த நிலப்பரப்பில் இருந்தும், எந்த உயரத்தில் இருந்தும் இதை பயன்படுத்த முடியும். இதில் உள்ள ரேடார்கள், 10 கி.மீ., தொலைவில் உள்ள ட்ரோன்களையும் அடையாளம் காணக்கூடியது. அடையாளம் கண்ட உடன், எத்தனை ட்ரோன்கள் வருகின்றன என்பதை பொறுத்து, அதற்கு பொருத்தமான எண்ணிக்கையில் குறு ஏவுகணைகள் புறப்பட்டு செல்லும். தான் இருக்கும் இடத்தில் இருந்து, வானில் 60 அடி விட்டத்துக்குள் உள்ள மிகச் சிறிய ட்ரோன்களையும் கண்டுபிடித்து தாக்கும் திறன் இதற்கு உள்ளது. இதில் உள்ள மென்பொருள், எதிரியின் ட்ரோன்களை குழப்பவும், ஏமாற்றவும் வடிவமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RAMAKRISHNAN NATESAN
மே 15, 2025 13:03

இந்தியா அப்படி இப்படி பாதுகாப்பு ரீதியா வளர்ந்து சீனாவையும் சமாளிச்சுருமோ?


RAMAKRISHNAN NATESAN
மே 15, 2025 20:57

அறிவாலய அடிமைச் சில்லுண்டிகள் கவலை .....


Venkataramanan Ramanathan
மே 15, 2025 12:15

மிகச் சரியான கருத்துக்கள். பாகிஸ்தான் அழிந்தால் ஒழிய விடிவு காலம் பிறக்காது.


ராமகிருஷ்ணன்
மே 15, 2025 09:42

ஆயுதங்களின் பெயர்கள் எல்லாம் 200 ரூபாய் ஊபிஸ் வயிறு எரியும். திக திமுகவின் தலைகள் எல்லாம் தேர்தல் கவலையில் உள்ளனர். திமுக அல்லக்கை கட்சிகள், ஊடகங்கள் எல்லாம் உள்ளுக்குள் குமைந்து கொண்டு உள்ளனர்.


spr
மே 15, 2025 03:54

சிறப்பான முயற்சி பாராட்டுக்கள் இதே போல, ஏவுகணைகளின் மென்பொருள் செயலியை hack செய்து அது புறப்பட்ட இடத்தை நோக்கி திருப்பிவிடவோ அல்லது நாம் விரும்பும் திசையில், விரும்பு தூரத்தில் தாக்கவோ ஏற்ற மென்பொருள் செயலியை உருவாக்க வேண்டும். பாகிஸ்தானை அடியோடு அழிப்பதுதான் இந்தியாவின் நிம்மதிக்கு வழி செய்யும் ஆனால் அது நடக்க வல்லரசுகள் விடாது வரும் காலங்களில் பாகிஸ்தான் இந்த Drones மூலம் தாக்க முயலும் அல்லது மக்கள் மனதில் ஒரு பீதியை உருவாக்க முயலும் எனவே நாம் இதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்


Kasimani Baskaran
மே 15, 2025 03:49

சிறப்பு... பார்கவ அஸ்திரத்தை வடிவமைத்த நிறுவனத்துக்கு பாராட்டுகள். டிரோன் போரில் நான்தான் ராஜா என்று கொக்கரித்து உலக நாட்டாமையாக முயன்ற துருக்கிக்கு படு தோல்வி.. ஓட்டமான் பேரரசு என்று தன்னை நினைத்துக்கொள்ளும் துருக்கி தீவிரவாத நாடுகளுக்கு பின்னால் இருக்குமளவுக்கு கேவலப்பட்டுப்போனது. பாரத் மாதா கி ஜெய் भारत माता की जय


Raj S
மே 15, 2025 02:58

ஐயகோ... இங்க தமிழகத்துல இருக்கற சொரியான் கும்பலுக்கும், கோண வாயன் கும்பலுக்கும் வயிறு எரியுமே??


தாமரை மலர்கிறது
மே 15, 2025 02:31

இந்தியாவை சுற்றி பகைநாடுகள் சூழ்ந்துள்ளன. பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதிநவீன ராணுவத்தை கட்டமைக்க வேண்டிய நேரமிது. அதனால் மக்கள் பாதுகாப்பை எண்ணி, கடின முடிவாக ஜிஎஸ்டி வரியை பத்து சதவீதம் உடனடியாக உயர்த்த வேண்டும்.


கிஜன்
மே 15, 2025 00:21

எங்கள் இயற்பியல் பேராசிரியர் ....திரு.அனந்த சயன பார்கவா ..... சந்தோஷ படுவார் .... அவரது பெயரை வைத்ததற்காக ....


புதிய வீடியோ