உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் பள்ளி இடைநிற்றலுக்கு தீர்வு; மாணவர்கள் வீடுகளுக்கு செல்லும் போலீசார்

டில்லியில் பள்ளி இடைநிற்றலுக்கு தீர்வு; மாணவர்கள் வீடுகளுக்கு செல்லும் போலீசார்

புதுடில்லி; டில்லியில் பள்ளி இடைநிற்றலுக்கு தீர்வு காணும் வகையில், பாதியில் படிப்பை கைவிட்டவர்களின் வீடுகளுக்கே போலீசார் சென்று ஆலோசனை வழங்க உள்ளனர்.புதுடில்லியில் பா.ஜ., அரசு அமைந்த தருணத்தில் உள்துறை, காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு விஷயங்களை கையாள ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. ஏப்.4ம் தேதி நடந்த இந்த குழு கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கல்வித்துறைக்கு முக்கியமான சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.அவற்றில் முக்கியமானதாக டில்லி காவல்துறைக்கு பள்ளி மாணவர்களின் இடை நிற்றல் பட்டியலை காவல்துறைக்கு வழங்குவது ஆகும். மேலும், போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக எடுக்க வேண்டிய சில ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.இடைநிற்றல் தரவுகளுடன் ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை போலீசார், இடைநிற்றல் மாணவரின் வீட்டுக்கே சென்று, என்ன காரணத்துக்காக படிப்பை நிறுத்தினார், என்ன பிரச்னை என்பது குறித்து சென்று விவரங்கள் கேட்பர்.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது; டில்லி காவல்துறை யுவா என்ற சமூக காவல் திட்டம் ஒன்றை 2017ம் ஆண்டு செயல்படுத்தி வருகிறது. திறன் மேம்பாட்டு படிப்புகளை அளிப்பதன் மூலம் 17 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களின் குற்றங்களை தடுக்கலாம். பள்ளியை விடடு வெளியேறிய பிறகு மாணவர்கள் வேலைக்கு சென்று இருக்கலாம் அல்லது நகரத்தை விட்டு வெளியேறி இருக்கலாம். ஆனால் எதுவும் செய்யாமல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி சிறந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தந்து சிறப்பான முறையில் வழிநடத்த போலீசார் உதவுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.தலைநகர் டில்லியில் நடைபெறும் குற்றங்களில் 85 சதவீதம் குற்றங்களில் ஈடுபடுவோர் முதல்முறை குற்றவாளிகள் என்பதால் அதை தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகளை டில்லி அரசாங்கம் மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

MARUTHU PANDIAR
ஏப் 22, 2025 21:53

முக்கியமாக இந்த ட்ரோப் அவுட்டுகளே பின்னால் போதைப்பொருள், கிரிமினல் குற்றங்கள் இவற்றுக்கு அடிமையாகி அதில் லயித்து விடும் வாய்ப்பு உள்ளது.


mohanamurugan
ஏப் 22, 2025 21:27

தமிழ்நாட்டில் மிக மிக சிறப்பாக பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் படிக்க வைக்க முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


Yes your honor
ஏப் 22, 2025 17:17

நல்ல முயற்சி, ஆனால் மிகவும் வேலைப்பளு கூடிய ஒரு திட்டம். வெற்றியடைய வாழ்த்துக்கள். வெற்றியடைந்தால் உலகத்திற்கே முன்னோடியான ஒரு திட்டமாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை