உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பால்பவனில் குழந்தைகளுக்கான புது வரவு; போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா

பால்பவனில் குழந்தைகளுக்கான புது வரவு; போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா

பெங்களூரு: குழந்தைகளும் போக்குவரத்து விதிகள் தெரிந்து கொள்ளும் வகையில், கப்பன் பூங்காவில் உள்ள பால்பவனில் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா திறக்கப்பட்டுள்ளது.கப்பன் பூங்காவில் உள்ள பால்பவன், 12 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இங்கு குழந்தைகளை கவரும் வகையில் ரயில், படகு சவாரி உட்பட விளையாட்டு பகுதியும் அமைந்துள்ளன.வார இறுதி நாட்களில், குழந்தைகளுக்கு இலக்கியம், ஓவியம், கைவினை பொருட்கள், களிமண் கலை, குழு நடனம், குழு பாடல், யோகா, மேடை பயிற்சி, பானை ஓவியம் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டியில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.மைண்ட் டிரீ மற்றும் பாலபவன் சொசைட்டி இணைந்து, மாநிலத்தில் முதன் முறையாக, மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக 'நட்பு பூங்கா' அமைக்கப்பட்டுள்ளது.இத்தகைய இடத்தில், தற்போது குழந்தைகளும் போக்குவரத்து சிக்னல், விதிகளை அறியும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா திறக்கப்பட உள்ளது. இப்பூங்கா, ஒன்றரை ஏக்கரில், ஐந்து லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இரு புறமும் போக்குவரத்து சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன.சாலை மாற்று பலகை, ஜீப்ரா கிராசிங் உள்ளன. குழந்தைகள் தாங்களாகவே வாகனங்களை ஓட்டுவதன் மூலம், போக்குவரத்தை அனுபவிக்க முடியும். இதற்காகவே, 10 எலக்ட்ரிக் கார்கள், 5 பைக்குகள், 5 சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் பயணம் செய்ய, குழந்தைகளுக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பால்பவனின் இந்த புதிய முயற்சி, குழந்தைகளுக்கான கல்வி, ஒழுக்க வாழ்க்கை முறையை ஒன்றிணைப்பதற்கான ஒரு படியாக அமையும்.கல்வி நிறுவனங்கள், பெற்றோர் தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வந்து, சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள் குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை