உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரத்தில் வெளியான இ-மெயில் கடிதத்தால் புதிய திருப்பம்!; கோர்ட் அதிர்ச்சி

சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரத்தில் வெளியான இ-மெயில் கடிதத்தால் புதிய திருப்பம்!; கோர்ட் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம் மாயமான விவகாரத்தில், 'தங்கக் கவசம் செப்பனிடும் பணிக்குப் பின், மிச்சமான தங்கத்தை உதவி தேவைப்படும் பெண்ணின் திருமணத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்' என, தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி தேவசம் போர்டுக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் தொழிலதிபருக்கும், தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும் முறைகேட்டில் தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=78cr4v21&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019ல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

எடை குறைவு

செப்பனிடும் பூசும் செலவை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, சென்னையில் உள்ள அவரது 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனத்தில் செப்பனிடும் பணி நடந்தது. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்டப் பின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது. பக்தர்கள் மத்தியில் இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையை கண்டறிய கேரள உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 2019, ஆக., 11ம் தேதி செப்பனிடப்பட்ட கவசங்களை துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவித்த பின், தொழிலதிபர் உன்னிகிருஷ்ணனிடம் இருந்து, 'இ - மெயில்' வாயிலாக கடிதம் ஒன்று தேவசம் போர்டுக்கு அனுப்பப்பட்டது. அது குறித்த ஆதாரம் கேரள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், உன்னிகிருஷ்ணன் போத்தி கூறியிருப்பதாவது:

விரிவான விசாரணை

சபரிமலையின் கருவறை கதவு மற்றும் துவாரபாலகர்கள் சிலைகளுக்கு தங்க முலாம் பூசும் பணிகள் முடிந்த நிலையில், என்னிடம் தங்கம் மிச்சம் இருக்கிறது. உதவி தேவைப்படும் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு, தேவசம் போர்டு ஒத்துழைப்புடன் அந்த தங்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா? இது தொடர்பாக உங்களது மேலான கருத்துகளை வரவேற்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதை படித்து பார்த்து கேரள உயர் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 'இந்த செயல் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும், உன்னிகிருஷ்ணனுக்கும் இடையேயான கூட்டு எச்சரிக்கை மணி போல ஒலிக்கிறது. 'கோவில் சொத்து மீதான புனிதத்தை கெடுத்து, பக்தர்களின் நம்பிக்கைகளுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது' என, நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. துவாரபாலகர்கள் சிலையில் இருந்த தங்கம் மாயமானது குறித்தும், அதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்க பீடம்

சமீபத்தில் துவாரபாலகர்கள் சிலைகளில் இருந்து தங்க கவசங்கள் மீண்டும் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சபரிமலை சிறப்பு கமிஷனரின் அனுமதியின்றி, அந்த கவசங்கள் கழற்றப் பட்டதாக கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை நீதிமன்றம் விசாரித்தபோது தான், கடைசியாக 2019ல் கவசத்தை கழற்றியபோது, அதில் இருந்து 4.54 கிலோவுக்கு தங்கம் மாயமான விஷயம் அம்பலமானது. தவிர, காணாமல் போனதாக கூறப்பட்ட துவாரபாலகர்கள் தங்கபீடமும், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் உதவியாளரிடம் இருந்து மீட்கப்பட்டது. மாயமான தங்கம் அலறும் முன்னாள் தலைவர் ''தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்திக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை,'' என, தேவசம் போர்டு முன்னாள் தலைவர் வாசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தேவசம் போர்டு தலைவராக நான் பதவி வகித்தபோது, கவசங்களை செப்பனிடுவதற்காக கழற்றவில்லை. மேலும், துவாரபாலகர்கள் சிலைகளில் அந்த கவசங்கள் முறையாக பொருத்தப்பட்டதா? அதில் இருந்த தங்கம் சுரண்டி எடுக்கப்பட்டதா? என ஆராய்வதற்கும் அவசியம் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். மூத்த அதிகாரி சஸ்பெண்ட் துவாரபாலகர்கள் தங்கக் கவசம் குறித்த முறைகேடுகள் தொடர்பாக தேவசம் போர்டில் பணியாற்றி வந்த மூத்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தேவசம் போர்டு வெளியிட்ட அறிக்கை: சபரிமலையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த முராரி பாபு, மிகப்பெரிய தவறை செய்திருக்கிறார். தங்கமுலாம் பூசப்பட்ட துவாரபாலகர்கள் கவசங்களில் இருப்பது செப்புத்தகடுகள் என, 2019, ஜூலை 17ல் சபரிமலை செயல் அதிகாரியிடம் அறிக்கை அளித்திருக்கிறார். இது பெரும் தவறு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து முராரி பாபு கூறியதாவது: கோவில் தந்திரியின் கருத்தை கேட்ட பிறகே, அப்போது முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்தேன். அது செப்பு தகடு தான் என எழுதினேன். ஏனெனில் அது முழுமையான செப்பு தகடாக இருந்தது. அதன் காரணமாகவே தங்கமுலாம் பூச கழற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

RAMAKRISHNAN NATESAN
அக் 08, 2025 15:06

கலி முத்திப்போச்சு ......


ஆரூர் ரங்
அக் 08, 2025 12:40

இங்கே பழைய உடைந்த நகைகள் என்ற பெயரில் டன் கணக்கான தங்க நகைகளை (தர்மகர்த்தா க்களை நியமிக்காமல்) உருக்கியது தெரிந்ததே. எவ்வளவு களவு போனதுன்னு சந்தேகம் வருது.


ஆரூர் ரங்
அக் 08, 2025 12:38

திருடுபவர்கள் ஈமெயில் ஆதாரத்துடன் திருட மாட்டார்கள். எல்லா கவசங்களும் செப்பின் மீது மெல்லிய தடிமனான தங்க முலாம் பூசியது தான். கிலோக்கணக்கில் தங்க முலாம் என்பது அறிவியல் பூர்வமாக சாத்தியமா?


Ramesh Sargam
அக் 08, 2025 12:07

துவாரபாலகர்கள் என்றால் கோவில்களில் உள்ள கருவறையை வெளியிலிருந்து பாது காக்கும் காவல் தெய்வங்கள். அப்படிப்பட்ட காவல் தெய்வங்களிடமிருந்தே திருடியவர்களை கருவறைக்குள் வசிக்கும் தெய்வம் சும்மா விடுமா? விடாது. தெய்வம் நின்று கொல்லும்.


Ramesh Sargam
அக் 08, 2025 11:32

துவாரபாலகர்கள் என்றால் கோவில்களில் உள்ள கருவறையை வெளியிலிருந்து பாதுகாக்கும் காவல் தெய்வங்கள். அப்படிப்பட்ட காவல் தெய்வங்களிடமிருந்தே திருடியவர்களை கருவறைக்குள் வசிக்கும் தெய்வம் சும்மா விடுமா? விடாது. தெய்வம் நின்று கொல்லும்.


Swaminathan L
அக் 08, 2025 10:52

அந்த கவசங்கள் அல்லது தகடுகள் முழுமையான தங்கம் என்றால் அவற்றுக்கு தங்க முலாம் பூச வேண்டிய அவசியம் என்ன? ஏறக்குறைய 43 கிலோ தங்கத்தாலானவை அவை என்றால் அவற்றின் மதிப்பு எத்தனை கோடி? செப்புத் தகடுகளில் தங்க முலாம் பூசப்பட்டு அது நாளடைவில் மங்கிப் போயிருந்தால் அவற்றுக்கு மறுபடியும் தங்க முலாம் பூசுதல் தற்காக அகற்றி இருக்கலாம். இறுதியாக ஏறக்குறைய நாலரை கிலோ எடை குறைந்து விட்டது என்றால் அது மொத்தமும் தங்கத்தின் எடையா? மீதமான அத்தனை தங்கத்தையா, ஒரு பெண்ணின் திருமணத்திற்குப் தேவையாக இருக்கிறது, தேவஸ்வம் போர்டு அனுமதித்தால் அதற்காக உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று மின்னஞ்சலில் கேட்டிருக்க முடியும்?


Anantharaman Srinivasan
அக் 08, 2025 10:38

தங்கம் குறைந்ததை கண்டுபிடித்த நாள் எது? இமெயில் பதிவான நாள் எது? மாட்டிக்கொண்டவுடன் தப்பிப்பிப்பதற்கான யுக்தி.. கூட்டு களவாணிகள். சிலைகளையே கடத்தி விற்பவர்களுக்கு இது எம் மாத்திரம்..?


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 08, 2025 10:38

திராவிட மாடல் பார்த்து கேரளா காரர்கள் முயற்சி செய்து உள்ளார்கள். ஆனால் ஒன்றை மட்டும் விட்டு விட்டார்கள் அதனால் தான் மாட்டிக் கொண்டார்கள் அதாவது அது தான் விஞ்ஞான ரீதியாக எதையும் செய்ய வேண்டும் என்பது.


N. Ramachandran
அக் 08, 2025 10:25

கேரளா சேட்டன்களுக்கு ரொம்பவே கேட்ட நேரம் நெருங்கிவிட்டது. ரொம்பவே துள்ளாதீங்க அழிந்து போவீங்க.. யார்கிட்ட மோதினாலும் சரி ஆனால் ஸ்வாமி ஐயப்பன் கிட்ட மோதினால் உங்க குலநாசம் ஆகும். எச்சரிக்கை... எச்சரிக்கை.... எச்சரிக்கை....


Ramesh Sargam
அக் 08, 2025 10:09

உன்னிகிருஷ்ணன் போத்தியை நன்றாக உதைத்தால் பல உண்மைகள் வெளிவரும். கடவுளின் பொருட்கள் மேலே கைவைக்கிறார்கள் என்றால் இவர்கள் எப்படியாப்பட்ட திருடர்கள். கடவுள் நின்று கொல்லும் என்று கூறுவார்கள். கடவுள் நின்று கொல்லட்டும். சட்டம் உடனே கொல்லட்டும்.


புதிய வீடியோ