உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த வேலை; அடுத்த டார்கெட்; புதிய ராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்த காங் எம்.பி.,சசிதரூர் ரஷ்யாவுக்கு பயணம்!

அடுத்த வேலை; அடுத்த டார்கெட்; புதிய ராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்த காங் எம்.பி.,சசிதரூர் ரஷ்யாவுக்கு பயணம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க வெளிநாடு சென்று நாடு திரும்பிய காங்கிரஸ் எம்.பி., சசி தரூருக்கு இரண்டாவது ராஜதந்திர சுற்று பயணத்தை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.ஏப்ரல் 22ம் தேதி நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளையும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையையும் பல்வேறு நாடுகளுக்கும் நேரில் சென்று விரிவாக விவரிப்பதற்காக, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்தது.

நிலைப்பாடு

அதன்படி எம்.பி.,க்கள் குழு வெற்றிகரமாக வெளிநாடுகளுக்கு சென்று பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்துவிட்டு நாடு திரும்பியது. அந்த ஒரு குழுவிற்கு காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு துளி அளவு கூட விருப்பம் இல்லை. ஆனால் எதிர்ப்பை மீறி, அனைத்துக்கட்சி குழு எம்.பி.,க்களுடன் பல்வேறு நாடுகளுக்கு சசி தரூர் பயணம் மேற்கொண்டார். நாடு திரும்பிய எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்து பாராட்டினார். அதன் பிறகு சசி தரூர் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு மிகவும் சிறப்பாக செயல்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

ரஷ்யா, இங்கிலாந்து, கிரீஸ்!

இந்நிலையில், நாடு திரும்பிய காங்கிரஸ் எம்.பி., சசி தரூருக்கு இரண்டாவது ராஜதந்திர சுற்று பயணத்தை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு சசி தரூருக்கு கிடைத்துள்ளது.இரண்டு வார பயண திட்டத்தை சசி தரூர் மீதான நம்பிக்கையில் பிரதமர் மோடி ஒப்படைத்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

2வது பயணம்

பயணத்தின் போது, சசி தரூர் இந்தியாவின் உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். அவர் பிரதமர் மோடியின் அறிவுறுத்தல் படி, இந்தியாவின் நட்பு நாடுகளுடன் சில முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இவரது 2வது வெளிநாட்டு சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Dinesh Pandian
ஜூலை 23, 2025 17:23

இவர தான் வெளி உறவு துறை துணை மந்திரியாக நியமிக்கலாம்


Suppan
ஜூன் 21, 2025 16:39

காங்கிரஸ் சஷி தரூரை வெளியேற்றினால் கட்சிக்குத்தான் நஷ்டம். பாஜக உடனே அவரை ஏற்றுக்கொள்ளும். கட்சி தாவல் சட்டம் பொருந்தாது.


Suppan
ஜூன் 21, 2025 16:37

சஷி தரூரின் திறமையை உபயோகப்படுத்திக் கொள்ள காங்கிரசுக்கு மனமில்லை. ராகுலுக்கு அடிபணிந்தால்தான் கட்சியில் மதிப்பு கிடைக்கும் . அதாவது சிங்கம் கழுதையின் இதை விட நாகரீகமான மிருகம் உள்ளதா தலைமையை ஏற்க வேண்டும்


S. Venugopal
ஜூன் 21, 2025 15:41

அன்று ஹெட்லெஸ் சிக்கன் என்று எதிர் கட்சித்தலைவர்களை வர்ணித்தவர் ......... காலம் காலமாகவே நமது நாடு சந்தர்ப்பவாதிகளின் நாடு


Lion Drsekar
ஜூன் 21, 2025 13:52

முன்னாள் மூன்றெழுத்து அரசு ஊழியர்கள், நீதியரசர்கள், எதிர்க்கட்சியில் இருந்து வந்தவர்கள் இவர்களுக்குத்தான் அரசியலிலும் முக்கியத்துவம், அவரவர்கள் கட்சிகளுக்காகவே வாழ்ந்த, உழைத்த, உழைத்துவரும் தொண்டர்களுக்கு அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சியில் அதே நிலைதான் . பாராட்டுக்கள், வந்தே மாதரம்


Venkat, UAE
ஜூன் 21, 2025 13:36

நண்பரே, நீங்கள் குறிப்பிட்ட சாணக்கிய நீதி இந்த இருவருக்கும் பொருந்தாது. மோடி எப்போவுமே சிங்கம்தான், ராஜாதான். Dr. சசிதரூர் காங்கிரஸ் கட்சியில் கழுதையின் கீழ் இருந்தாலும் வென்று கொண்டிருக்கும் சிங்கம்


KR india
ஜூன் 21, 2025 12:32

மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றால், மணம் இல்லாமல் போய் விடுமா என்ன ? காங்கிரஸ் கட்சியில் இருக்கும், இவரைப் போன்ற மேலும் சில சிறந்த தலைவர்களை, மோடிஜி அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவர்கள், பாரதீய ஜனதாவுக்கு நன்மை செய்வதாக, காங்கிரஸ் கட்சி கருத வேண்டியதில்லை. நம் நாட்டிற்கு உதவி செய்கின்றனர் என்று தான் காங்கிரஸ் கட்சி கருத வேண்டும். மத்திய அரசும், அரசுக்கு ஒத்துழைப்பு தரும், டாக்டர்.சசிதரூர் போன்ற அன்பர்களுக்கு, அவர்கள் செய்யும் சேவையை, நாட்டிற்கு செய்யும் தொண்டாக கருதி, அதற்குண்டான சம்பளம், ஊக்கத்தொகை, பயணப்படி போன்றவற்றில் எந்த குறையும் இல்லாமல், பார்த்து கொள்ள வேண்டும்.


subramanian
ஜூன் 21, 2025 12:32

சசிதரூர் அவர்களை 150 கோடி பாரத மக்கள் சார்பாக வணங்கி வாழ்த்துகிறேன்


Ramesh Sargam
ஜூன் 21, 2025 12:20

சசி தரூர், இப்பொழுது Unofficial External Affairs Minister. ஒருவேளை சசி அவர்கள் முற்றிலும் பாஜகவில் இணைந்துவிட்டால், அடுத்த தேர்தலுக்கு பிறகு Official External Minister பதவிதான். சந்தேகமே இல்லை.


aaruthirumalai
ஜூன் 21, 2025 12:16

தேசத்திற்காக ஆளுங்கட்சி எதிர்கட்சி இணைந்து செயல்படுவது சிறப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை