உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாலை பயணத்தால் விபரீதம்; மத்திய பிரதேசத்தில் வேன்- லாரி மோதி 9 பேர் பரிதாப பலி

அதிகாலை பயணத்தால் விபரீதம்; மத்திய பிரதேசத்தில் வேன்- லாரி மோதி 9 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேசத்தில் வேன்- லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து அதிகாலை 2.30 மணிக்கு நிகழ்ந்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபுவா மாவட்டத்தில் வேன்- லாரி மோதி விபத்து ஏற்பட்டது. திருமணம் நிகழ்ச்சிக்கு சென்று விட்டுவேனில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த விபத்து அதிகாலை 2.30 மணிக்கு நிகழ்ந்துள்ளது. துாக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று கண் அசந்தாலும் பெரும் விபத்து நேரிட்டு விடும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ديفيد رافائيل
ஜூன் 04, 2025 11:50

இந்த மாதிரி news படிச்சு கூட திருந்த மாட்டானுக. அவனவனுக்கு பட்டா தான் புத்தி வருது


அப்பாவி
ஜூன் 04, 2025 11:19

கதி சக்தி ஹைன். ராவுல கண்ணு தெரியாது ஹைன். எல்லா மாநிலங்களிலும் சூப்பர் வளர்ச்சி. கண்ட்ச்வன் குடிச்சிட்டு, கூல் லிப், கஞ்சா, ஜர்தா பான் சாப்புட்டு வண்டி ஓட்டுறாங்க ஹைன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை