உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கி மோசடி வழக்கில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் அமெரிக்காவில் கைது

வங்கி மோசடி வழக்கில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் அமெரிக்காவில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியாவில் வங்கி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2008ம் ஆண்டு முதல் மோசடியான ஒப்பந்தக் கடிதங்களை வெளியிடுவதில் பஞ்சாப் நேஷனல் வங்கி (பி.என்.பி) அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டதாகவும், வங்கிக்கு ரூ.8,526 கோடி மதிப்புள்ள இழப்புகளை ஏற்படுத்தியதாகவும் நிரவ் மோடி மற்றும் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய நிரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி, இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pqlng37x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளதாவது:இந்தியாவின் கோரிக்கையை தொடர்ந்து வங்கி மோசடி வழக்கில் பெல்ஜியத்தில் வசிக்கும் நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடியை கைது செய்துள்ளோம். நேஹல் மோடி நேற்று காவலில் எடுக்கப்பட்டார். தற்போது ஒப்படைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.நேஹல் மோடி மீது இரண்டு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பணமோசடி, குற்றவியல் சதி மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது ஆகி உள்ளார்.நீரவ் மோடியின் குற்றச் செயல்களின் மூலம் கிடைத்த வருமானத்தை பங்கு போடுவதில் நேஹல் முக்கிய பங்கு வகித்ததாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. போலி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனைகளின் வலைப்பின்னல் மூலம் அதிக அளவிலான சட்டவிரோத நிதியை மறைத்து மாற்றுவதில் அவர் உதவி செய்துள்ளார்.இவ்வாறு அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Raghavan
ஜூலை 05, 2025 20:56

2008ல் நடந்த ஒரு கூத்துக்கு 2025ல் தான் கைது. அமெரிக்காவில் சட்டபூர்வமாக எல்லாம் முடிந்து அவர் இந்தியா வர குறைந்தது ஒரு வருடம் ஆகும். இங்கு வழக்கை பதிவுசெய்து அதற்க்கு ஒரு நம்பர் கொடுக்க குறைந்தது ஒரு வருடம் ஆகும். பிறகு விஜாரணைக்கு வருவதற்கு ஒரு 2 முதல் 4 வருடங்கள் ஆகும். இங்கு கபில் சிபில் போன்றோர் இப்போதே அட்வான்ஸ் வாங்கி இருப்பார்கள். அவர்களும் நீதி அரசர்களை பார்த்து செய்யவேண்டியதை செய்து இருப்பார்கள். எப்படியும் கலியுகம் முடிவதற்குள் நீதிமன்றம் கூறும் தீர்ப்பு - போதிய வலுவான சாட்சியங்கள் இல்லாததாலும் ஆதாரங்கள் இல்லததானாலும் வழக்கு தள்ளுபடி ஆகிறது என்று தீர்ப்பு வரும். அடுத்துவரும் அரசாங்கம் இப்போது உள்ள அரசாங்கம் 2G வழக்கை எப்படி கையாளுகிறது அப்படியே கையாளும் இந்த வழக்கை. இதெல்லாம் நம் தலை எழுத்து.


கண்ணா
ஜூலை 06, 2025 08:40

சரியாக சொன்னீர்கள். ஒரு சாதாரண குடிமகன் நினைப்பதை பதிவு செய்தீர்கள். நன்றி.


Rathna
ஜூலை 05, 2025 20:30

அடித்த கொள்ளையில் ஒரு 200 கோடி எடுத்து விட்டால், கேசு குறைந்தபட்சம் 50 வருடம் நடக்கும் பின்னர் தள்ளுபடி செய்யப்படும்.


Ramesh
ஜூலை 05, 2025 16:55

இந்தியாவிற்க்கு இவரை கொண்டு வந்ததும் பப்புவின் ஆசிர்வாதத்துடன் கபில்சிபல் இவருக்காக நீதிமன்றத்தில் வழக்காடுவார்.


முக்கிய வீடியோ