உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காவிரி ஆற்றால் சூழப்பட்ட நிசர்கதாமா தீவு!

காவிரி ஆற்றால் சூழப்பட்ட நிசர்கதாமா தீவு!

காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டம், மடிகேரியில் இருந்து 29 கி.மீ., தொலைவில் அமைந்து உள்ளது காவிரி நிசர்கதாமா தீவு.கடந்த 1988ல் வனத்துறை சார்பில் இத்தீவு உருவாக்கப்பட்டது. 64 ஏக்கரில் உருவாக்கப்பட்ட இந்த தீவு, மூங்கில், சந்தனம், தேக்கு மரங்களால் நிறைந்துள்ளது. அத்துடன், சிறுவர்களை கவரும் வகையில் மான் பூங்கா, முயல் பூங்கா, மயில் பூங்கா, ஆர்சிட் மலர்கள் பூங்காவும் அமைந்துள்ளன.இயற்கையை நேசிப்பவர்களுக்கான சிறந்த இடமாகும். கிளிகள், மரங்கொத்திப் பறவைகள் உட்பட பல வகையான பட்டாம்பூச்சிகளை காணலாம். தீவை இணைக்கும் வகையில், தொங்கு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.தீவை சுற்றி செல்லும் காவிரி ஆற்றில், பயணிக்க படகு சவாரியும், யானை சவாரியும் உள்ளது. அதேவேளையில் ஆற்றின் பாதுகாப்பான பகுதிகளில் சுற்றுலா பயணியர் இறங்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மரத்தாலான மூங்கில் குடிசைகள், வனத்துறை விருந்தினர் இல்லங்கள் உள்ளன. இதன் அருகிலேயே காவிரி நதி ஓடுகிறது.� காவிரி ஆற்றில் படகு சவாரி செய்யும் பயணியர். � தீவை இணைக்கும் தொங்கு பாலம்

எப்படி செல்வது?

குடகிற்கு விமான சேவை இல்லாததால், பெங்களூரில் இருந்து மைசூரு சென்று, அங்கிருந்து பஸ் அல்லது காரில் செல்லலாம். ரயிலில் செல்பவர்கள் மடிகேரி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ அல்லது காரில் செல்லலாம்.பஸ்சில் செல்பவர்கள், குஷால் நகர் பஸ் நிலையத்தில் இருந்து அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள காவிரி நிசர்கதாமாவுக்கு ஆட்டோ அல்லது காரில் செல்லலாம்.

எப்படி செல்வது?

குடகிற்கு விமான சேவை இல்லாததால், பெங்களூரில் இருந்து மைசூரு சென்று, அங்கிருந்து பஸ் அல்லது காரில் செல்லலாம். ரயிலில் செல்பவர்கள் மடிகேரி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ அல்லது காரில் செல்லலாம்.பஸ்சில் செல்பவர்கள், குஷால் நகர் பஸ் நிலையத்தில் இருந்து அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள காவிரி நிசர்கதாமாவுக்கு ஆட்டோ அல்லது காரில் செல்லலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ