உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதிஷ்... இதான் சான்ஸ்! என்.டி.ஏ., விட்டு வெளியே வாங்க! அழைக்கிறார் அகிலேஷ்

நிதிஷ்... இதான் சான்ஸ்! என்.டி.ஏ., விட்டு வெளியே வாங்க! அழைக்கிறார் அகிலேஷ்

லக்னோ; தேசிய ஜனநாயக கூட்டணிக்கான ஆதரவை நிதிஷ்குமார் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். லக்னோவில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஜெயந்தி விழாவில் அவரது சிலைக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால், அங்கு யாரும் நுழையாத படி, தகரத்தில் அமைக்கப்பட்ட தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியது. இந் நிலையில், உ.பி., அரசின் இந்த நடவடிக்கைக்கு அகிலேஷ் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறி உள்ளதாவது; ஜெய்பிரகாஷ் நாராயண் தலைமையிலான இயக்கத்தில் இருந்து வந்தவர் நிதிஷ் குமார். அவருக்கு மரியாதை செலுத்த வந்தபோது அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. உ.பி., அரசுக்கு ஜெய் பிரகாஷ் நாராயண் பற்றி என் தெரியும்? இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த வாய்ப்பை நிதிஷ்குமார் பயன்படுத்திக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கான ஆதரவை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

bgm
அக் 11, 2024 18:27

அப்போ உன் கட்சிய கலைத்துவிட்டு பேசாமல் நிதிஷ் கூட ஐக்கியம் ஆகிவிடு. வாழ்க ஜெபி நாராயணன்


R SRINIVASAN
அக் 11, 2024 18:05

இந்த அகிலேஷ் பதவி வெரி பிடித்தவன் .நாட்டைப்பத்ரி இவனுக்கு எந்த கவலையும் கிடையாது


panneer selvam
அக் 11, 2024 15:47

Aklesh ji , Nithesh already had a bad experience at so called INDIA alliance and burnt his face . If he listen to your advice , then his whole body will be burned out . That will bring end of his political carrier .