உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறைகளில் சாதிய பாகுபாடு பார்க்காதீங்க: சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

சிறைகளில் சாதிய பாகுபாடு பார்க்காதீங்க: சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடில்லி: 'சிறைகளில் சாதிய பாகுபாடு காட்டக்கூடாது. சாதிய பாகுபாடு இருந்தால் மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்' என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.11 மாநில சிறைகளில் சாதிய ரீதியிலான அணுகுமுறை விதிகளை ரத்து செய்யக் கோரி, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை, இன்று(அக்.,03) சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:* சிறைகளில் சாதிய பாகுபாடு இருந்தால் மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். சாதியை வைத்து பாகுபாடுகளை காட்டக்கூடாது.* கைதிகள் மனிதாபிமானமற்ற முறையில் வேலை செய்ய வைத்தாலோ, அதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.* சிறைகளில் சாதிய பாகுபாடு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும்.* கைதிகளின் மனநிலை, உடல்நிலை குறித்து சிறை நிர்வாகம் அறிந்து வைத்திருக்க வேண்டும். கைதிகளை மனிதாபிமானத்துடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும். * சாதிய அடிப்படையில் பாகுபாடு, வெறுப்பை உமிழ்வது காலனிய நிர்வாகத்தையே காட்டுகிறது. * அரசியலமைப்பு சட்டங்கள் குடி மக்களின் கண்ணியத்தையும், சமத்துவத்தையும் நிலை நிறுத்த வேண்டும். * தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை சாதிய ரீதியில் வகைப்படுத்தக் கூடாது.* சாதிய ரீதியில் வகைப்படுத்திய பதிவுகள் சட்டவிரோதமானவை, அவை அழிக்கப்பட வேண்டும். * குறிப்பிட்ட மாநிலங்களின் சிறைச்சாலை விதிகள் அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ளன. தற்போதைய தீர்ப்பின் படி சிறை விதிகளில் மாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை