உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை!: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை!: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு, காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்க தேவையில்லை' என, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவின் மல்லசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் ரவிஷா. இவர் கடந்த 2014 ஜூன் 18ல் தன் கிராமத்தில் இருந்து அரசிகரே நகருக்கு காரில் சென்றார். உடன் பெற்றோர், சகோதரி மற்றும் குழந்தைகள் பயணித்தனர். திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிச் சென்ற ரவிஷா உயிரிழந்தார். மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

தள்ளுபடி

ரவிஷாவின் இறப்புக்கு 'தேர்ட் பார்ட்டி' எனப்படும், மூன்றாம் தரப்பினருக்கான பிரிவின் கீழ் 80 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி அவரின் மனைவி, மகன் மற்றும் பெற்றோர் அரசிகரேயில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த தீர்ப்பாயம், 'அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்பட அவரே காரணமாக இருந்துள்ளார். எனவே அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் இழப்பீடு பெறுவதற்கு உரிமை இல்லை' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து உயிரிழந்த ரவிஷாவின் குடும்பத்தினர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.விசாரணையின் போது, 'ரவிஷா ஓட்டிச்சென்ற கார் அவருடையது இல்லை. அதை கடனாக வாங்கிச் சென்றார். எனவே, காப்பீட்டு நிறுவனம் இறப்புக்கான இழப்பீடு தொகையை மறுக்கக் கூடாது' என வாதிடப்பட்டது.இதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், 'வேறொருவரின் வாகனத்தை வாங்கி ஓட்டும் போது, அவரும் வாகன உரிமையாளராகவே கருதப்படுகிறார்.எனவே, வாகன உரிமையாளர் அல்லது வாகனத்தை கடன் வாங்கியவரின் சொந்த அலட்சியத்தால் ஏற்படும் இறப்பு அல்லது காயங்களுக்கு காப்பீடு நிறுவனத்தை பொறுப்பாக்க முடியாது' எனக் கூறி விபத்து இழப்பீடுக்கான தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்தது. இந்நிலையில், ரவிஷாவின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் மகாதேவன் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

குற்றப்பத்திரிகை

வாதங்கள் முடிந்த பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இறந்தவர் அலட்சியமாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது என்று போலீசாரின் குற்றப்பத்திரிகை தெளிவாகக் கூறுகிறது. 'எனவே அவரது வாரிசுகள் இழப்பீடு கோர உரிமையற்றவர்கள். காப்பீடு நிறுவனமும் இத்தகைய இறப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை. உயர் நீதிமன்ற முடிவில் தலையிடுவதற்கு தகுந்த காரணம் எதுவும் இந்த வழக்கில் இல்லை' எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Selvaraj K
ஜூலை 04, 2025 23:34

20/6/2025 அன்று எனக்கு விபத்து ஏற்பட்டது தலை & உடலில் கடுமையான காயம் அடிபட்ட எனக்கு உதவ யாரும் இல்லை ஆனால் விபத்தை உண்டாகுன நபர காப்பதில் தப்பிக்க வைப்பதில் இருந்தார்கள் மக்களிடம் மனிதம் மறுத்து போன பிறகு அரசு ஊழியர் அதிகாரிகளிடம் மனிதத்தை எதிர் பார்க்க முடியாது நீதி காவல் மற்றும் எந்த துறைய இருந்தாலும் கூட்டு களவானிகள் அவர்களை காப்பாற்றி கொள்ள எத்தனிப்பார்கள்


samvijayv
ஜூலை 04, 2025 10:16

எல்லாம் சரி தான் வாத்தியாரே.., அப்ப ஒரு சில வாரங்களுக்கு முன் விமான ஒன்று விபத்துக்குள்ளானது அதன் உரிமையாளர் உடனடியாக உயிர் இறந்தவர்களுக்கு தல ஒரு கோடி என்று அறிவித்தது அது எப்படி? சரி தமிழகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 69 நபர்கள் இறந்தார்கள் தமிழக அரசு உடனடியாக 10 லட்சம் அறிவித்தது அது எப்படி? இவர்கள் தனியா ஆயுள் காப்பீடு திட்டம் ஏதேனும் வைத்துள்ளார்களா? சட்டம் மென்மேலும் தனியார் மையத்துக்கு பெரும் பணக்காரர்களும் தான் சட்டம் என்பதனை மேலும் ஒருமுறை மிக அழுத்தமாக உள்ளது எந்த "தீர்ப்பு". திரு.பாக்யராஜ் ஒரு படத்தில் நீதிபதிக்கு தன் தீர்ப்பை தவறு என்று புரியும் படி உணரவைப்பார் அதுபோல் இது நீதிபதி இவர்களுக்கும் நடந்தால் அதன் விளைவுகள் அதனின் வலியும் வேதனையும் புரியும். சரியான தீர்ப்பு சரியான நேரத்தில் வரவில்லையெனில் அதுவும் "அநீதியே" தண்டனைக்கு உரியது தான். நான் சிகப்பு மனிதன்.


panneer selvam
ஜூலை 04, 2025 16:20

In Ahmedabad air crash , It is the generosity of Tata Group offering handsome compensation before any investigation . In Kalakurichi illicit liquor case , It is peoples money given by Stalin, knowing Tamilnadu people are inert . Insurance company is a commercial enterprise , so they are vigilant on paying the compensation . Any mistake of beneficiary is not tolerated by them


Selvaraj K
ஜூலை 04, 2025 23:02

சுதந்திர்க்கு முன் தான் நீதி நியாயம் இப்ப அத எல்லாம் எதிர் பார்க்க முடியாது கூடாது அந்த அளவுக்கு லட்சனம் நீதி மன்றத்தை நடத்துகிறார்கள் நம்ம வரி பணத்தில் நமக்கே அல்வா


அப்பாவி
ஜூலை 04, 2025 09:05

சரியா ஓட்டினாலே நடு ரோட்டிலே வாகனம் பத்தி எரியுதே. இதையெல்லாம் கேக்கு மாட்டீங்களா சாமி?


கோபாலன்
ஜூலை 04, 2025 08:15

நீதிமன்றத்தின் கருத்து இன்சூரன்ஸ் கம்பெனி பயனடைய உதவும். தெளிவில்லாத முடிவு.


GMM
ஜூலை 04, 2025 08:04

திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இது அதிவேகம், அலட்சியத்தை உறுதி செய்கிறது. ஒரு சிறந்த ஓட்டுநர் காரின் குறைபாட்டை ஓட்டும் போது அறிய முடியும். வேகத்தை குறைந்து, நிறுத்த முடியும். இழப்பீடு பெற தகுதி இல்லை. விசாரணை, உச்ச நீதிமன்றம் தீர்வு சரியே.


உ.பி
ஜூலை 04, 2025 07:44

ஊருல பைக்ல 5 பேரு போறாங்க, wrong sideல் போறாங்க..அது மட்டும் பரவாயில்லையா? இதெல்லாம் கோர்ட்க்கு கண்ணுல படலையோ


Varadarajan Nagarajan
ஜூலை 04, 2025 07:05

அலட்சியமாக வாகனம் ஓட்டினார் என்று எப்படி வரையறை செய்வது? இந்த வாதத்தை சரியென்று நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதால் இனிவரும்காலங்களில் பெரும்பாலான விபத்து காப்பீடு வழக்குகளில் காப்பீட்டு நிறுவனங்கள் இந்த தீர்ப்பை மேற்கொள்காட்டி நிராகரிக்க வாய்ப்புண்டு.


Padmasridharan
ஜூலை 04, 2025 05:43

சாமியோவ், மொதல்ல நல்லா ஓட்டாதவங்களுக்கு லைசென்ஸ் கொடுப்பதை காவலர்கள் நிறுத்தட்டும். நிறைய விபத்துக்கள் தடுக்கப்படும். பிரேக் போடறத விட்டுட்டு சிறு சிறு தெருக்களில் கூட ஹார்ன் அடித்துக்கொண்டே இருப்பதும் , லைட் இண்டிகேட்டர்ஸ் தவறாக போடுவதும் நடக்கின்றது


Kasimani Baskaran
ஜூலை 04, 2025 03:43

கார் கட்டுப்பாட்டை இழந்தது என்றால் எப்பேர்ப்பட்ட ஓட்டுநராக இருந்தாலும் வாகனத்தை கட்டுப்படுத்துவது முடியாத காரணம் - இன்சூரன்ஸ் நிறுவனம்தான் பொறுப்பேற்க வேண்டும். போதையில் இருந்தார் அல்லது வேண்டுமென்றே நேராக போய் இடித்தார் என்றால் நீதிமன்றம் சொல்லுவது சரி.


Rajan A
ஜூலை 04, 2025 03:34

ஏற்கனவே கம்பெனிகள் எப்படிடா இன்ஷுரன்ஸ் பணத்தை தராமல் இருக்கலாம்னு பார்க்கிறது. இனிமேல் நிறைய விபத்தில் " தாறுமாறாக ஓட்டினார்" அப்படினு ஆட்டையை போட்டு விடுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை