எந்த நெருக்கடிகளும் இந்தியாவை அழிக்க முடியாது: மோகன் பகவத் பேச்சு
ஜெய்ப்பூர்: '' எந்த நெருக்கடிகளும் இந்தியாவை அழிக்க முடியாது,'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பல்நாத் ஆசிரமத்தை பார்வையிட்ட அவர், மஹாமிரிதுயுஞ்ஜெய் மகாயாகத்தில் பங்கேற்றார்.இதன் பிறகு நடந்த இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: எந்த நெருக்கடிகளும் இந்தியாவை அழிக்க முடியாது. இந்தியா அமைதிக்கான இடம் மட்டுமல்ல. இந்தியாவே சனாதனம். சனாதன தர்மத்துடன் இந்தியா உள்ளது. இந்தியாவில் சனாதனம் உள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நமது சகோதரர்கள் உயர்வு பெற நாம் முயற்சி செய்ய வேண்டும். நம்மிடம் உள்ளவற்றை அவர்களுடன் பகிர்ந்து அவர்களை கைதூக்கிவிட வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.