உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை: பட்ஜெட்டில் நிர்மலா அறிவிப்பு

ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை: பட்ஜெட்டில் நிர்மலா அறிவிப்பு

புதுடில்லி: ஆண்டுக்கு ரூபாய் 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=udi6wplo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* மூத்த குடிமக்களுக்கு வருமானவரி கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1,00,000 ஆக உயர்வு.* வாடகை மீதான வரி தள்ளுபடி ரூ.2.4 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்வு.* ஆண்டுக்கு ரூபாய் 12 லட்சம் வரை புதிய வருமான வரி விகிதத்தின் கீழ் வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை. 2023ல் 7 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.வருமானம்- வரி விகிதம் * ரூ.24 லட்சத்திற்கு மேல் - 30 சதவீதம்* ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை- 25 சதவீதம்* ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை- 20 சதவீதம்* ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை- 15 சதவீதம்* ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - ரூ.5 சதவீதம்* ரூ.4 லட்சம் வரை- வரி இல்லை. புதிய வருமான வரி முறையில் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை என்பது தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. கூடுதலாக ரூ.75 ஆயிரம் வரை நிலைக்கழிவும் கிடைக்கும். இது நடுத்தர வாழ் மாத ஊதியம் பெறும் மக்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

பட்ஜெட்டில் திருக்குறள் சொன்ன நிர்மலா!

பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து கூறுகையில் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். “வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழுங் குடி”என்ற செங்கோன்மை அதிகாரத்தில் உள்ள திருக்குறளை மோடி அரசுடன் சுட்டிகாட்டி அதன் அடிப்படையில் வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்றார். உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் மக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது என்பது குறளின் பொருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 88 )

தாமரை மலர்கிறது
பிப் 01, 2025 23:54

சூப்பர் பட்ஜெட்


தாமரை மலர்கிறது
பிப் 01, 2025 23:53

நிலை கழிவு எழுபதிந்தாயிரம் உள்ளது. அது பன்னிரண்டு லட்சம் வரை நீங்கள் வரி செலுத்துவதை தவிர்க்கும். அதற்கு மேல் உள்ள வருமானத்திற்கு தான் வரி செலுத்த நேரிடும். நாலிருந்து எட்டு லட்சத்திற்கான தொகையை நிலைக்கழிவிலிருந்து கழித்துவிடுவார்கள்.


கிஜன்
பிப் 01, 2025 21:41

BIHARUDGET ...... பிறந்த தமிழகத்திற்கும் ..... வாக்கப்பட்ட தெலுங்கானாவிற்கும் .... நெற்றியிலிடும் திருமண் ...


sankaranarayanan
பிப் 01, 2025 21:23

திராவிட மாடல் அரசுதான் எப்போது பார்த்தாலும் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து மக்களுக்கு வரவேண்டிய எல்லா சலுகைகளையும் இழக்கிறது மேலும் இங்கிருக்கும் ஆளுநரையும் விட்டுவைக்கவில்லை அவர் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று அடுக்கிக்கொண்டே போகிறது ஆந்திராவும் பீஹாரும் அடிபணிந்து நல்லுறவை பேணிக்காத்து சமயோஜிதமாக நடந்து மக்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொள்கிறார்கள்.


spr
பிப் 01, 2025 20:22

"புதிய முறை வரி விகிதத்தில் ஏழு லட்சம் என்பது இப்போது பன்னிரண்டு லட்சமாக ஆகியிருக்கிறது. பழைய முறையில் வரிக்கான வருமானம் இரண்டரை லட்சத்திலிருந்து நான்கு லட்சமாக உயர்ந்திருக்கிறது" அதாவது சிறிது சிறிதாக புதிய வரி கட்ட மக்களைத் தயார் செய்கிறார்கள். அடுத்த முறை பழைய வரி கட்டும் முறை அறவே நீக்கப்படும். வருடத்திற்கு 12 லட்சம் பெறுபவர் தாங்கள் இப்போது அனுபவிக்கும் பல சலுகைகளுக்கு உரிமை பெற மாட்டார்கள் "ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை" அவ்வளவே


Ashok Subramaniam
பிப் 01, 2025 20:18

அட உபீஸுகளா திருக்குறளை வைத்துப் பிழைப்பை நடத்திய கட்டுமரமும், ஒரு திருக்குறள் கூட துண்டுச் சீட்டில்லாமல் படிக்கமுடியாத தத்தி முதல் ஆமைச்சரும் சொல்லலாமென்றால், அறிவுமிக்கத் தமிழச்சி நிர்மலா சொன்னால் சந்தோஷப்படுங்க வயித்தெரிச்சல்ல சாகாதீங்க?


அப்பாவி
பிப் 01, 2025 20:08

பெரிய மன்னராட்சி நடத்துற மாதிரி திருக்குறள் மேற்கோள் வேறே.


kantharvan
பிப் 01, 2025 19:46

சீரோவை கண்டுபிடித்தது அம்மையார் என்று வரலாறு சொல்லும் உடன் பிறப்பே?? ஊறுகாயை விட அல்வா கிண்டுவதில் வல்லவராகி விட்டார்


திகழ்ஓவியன்
பிப் 01, 2025 18:58

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மக்கானா விதைகள் உற்பத்தி, செயலாக்கம், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை இந்த வாரியம் மேற்கொள்ளும் என கூறினார். அதே போல பீகார் மாநிலத்தில் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் இருக்கும் ஐஐடி விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்தார். பீகாரின் பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். பீகாரின் மிதிலாஞ்சல் பகுதியில் மேற்கு கோசி கால்வாய் திட்டம் செயல்படுத்த நிதி உதவி வழங்கப்படும் என்றார். இதனை அனிமல் படத்தில் ரன்பீர்கபூர் அப்பா என்ற வார்த்தையை 196 முறை கூறி இருக்கிறார் என்றால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் பீகார் என்ற வார்த்தையை 537 முறை கூறியிருக்கிறார் என ஒரு நபர் மீம் வெளியிட்டுள்ளார். பட்ஜெட்டில் பீ என்றால் பீகார் என அர்த்தம் என ஒரு பயனர் மீம் வெளியிட்டுள்ளார். இது பீஹாருக்கான BUDGET


திகழ்ஓவியன்
பிப் 01, 2025 18:57

இந்தியாவில் மொத்தம் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள். இதில் 7 கோடி பேர் வருமான வரியை பதிவு செய்கிறார்கள். அதில் 2 கோடி பேர்தான் வரியை கட்டுகிறார்கள். இதில் 1.5 கோடி பேர்தான் மாதம் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். ஆக இது இவர்களுக்கான பட்ஜெட்தான். என்னை மாதிரி அதிகம் சம்பாதிப்பவர்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை தள்ளுபடி கொடுத்திருக்கிறார்கள். எனவே நான் நிர்மலா சீதாராமனுக்கு மிகுந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், என்னை மாதிரியான ஆட்களுக்கு வருமான வரி சலுகை கொடுப்பதற்கு பதிலாக, சமானிய மக்களுக்கு சலுகை கொடுத்திருக்க வேண்டும். 2 கோடி பேருக்கு சலுகை எனில், மீதி 138 கோடி பேருக்கு என்ன கொடுத்திருக்கிறீர்கள்? ரிலையன்ஸ் மற்றும் நைரா எனும் ரஷ்ய நிறுவனம் ஹாப்பி ஹவர்ஸ் என்கிற திட்டத்தின் கீழ் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.3-5 வரை குறைத்து விற்கிறார்கள்.


K V Ramadoss
பிப் 03, 2025 02:23

140 கோடி மக்களில் 2 கோடி மக்கள் வரி காட்டுகிறார்கள் என்றால், மிக்க 138 கோடி மக்களில் கணிசமானவர்கள் வரி ஏய்ப்பு செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் சாமானியமானவர்கள் இல்லை. வியாபாரிகளின் பலர் வருமான வரியே செலுத்துவதில்லை. வருமான வரியை நீக்கிவிடலாம்.