உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அம்பானி மகனின் விலங்குகள் நல மையத்தில் முறைகேடு இல்லை

அம்பானி மகனின் விலங்குகள் நல மையத்தில் முறைகேடு இல்லை

குஜராத்தின் ஜாம்நகரில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, 'வன்தாரா' என்ற பெயரில் விலங்குகள் நல மையத்தை நடத்தி வருகிறார். இங்கு, சட்டவிரோத செயல்பாடுகள் நடப்பதாகவும், பல அரிய வகை விலங்குகள் கடத்தப்பட்டு இங்கு கொண்டுவரப் படுவதால் இந்த மையத்தை சட்டவிரோதமாக அறிவிக்கும்படி வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரிக்க எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இதற்கிடையே இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அம்பானி மகன் அனந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, “உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழுவிற்கு, 'வன்தாரா' ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர். அந்தக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சில முக்கியமான தகவல்கள் இருப்பதால், அவற்றை பொதுவெளியில் வெளியிடக் கூடாது,” என, வாதிட்டார். அப்போது பேசிய நீதிபதிகள், 'நாங்கள் அந்த அறிக்கையை படித்து பார்த்தோம். தனியார் வனம் செயல்படும் விதம் குறித்து விசாரணை குழு திருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறது. அனைத்து விதிமுறைகளும் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்' என்றனர். அப்போது மனுதாரரான வழக்கறிஞர் ஜெய் சுகின், “சில கோவிலுக்கு சொந்தமான யானைகளை கூட கோவில் நிர்வாகம் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்த தனியார் வனப் பகுதிக்கு அழைத்துச் செல்கின்றனர்,” என்றார். அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், 'கோவில் யானைகளை இவ்வாறு தனியார் வனப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதில் எந்த தவறும் இல்லை' என, தெரிவித்தனர். மேலும், 'சிறப்பு விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக, இனி யாரும் வழக்குகள் தாக்கல் செய்யக் கூடாது. இந்த தனியார் வனப்பகுதி சம்பந்தமான அவதுாறு செய்திகளையும் பரப்பக்கூடாது' என, திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Tamilan
செப் 16, 2025 16:04

கொள்ளைகூட கொத்தடிமைகள்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 16, 2025 11:25

கார்பன் கிரெடிட் என்று புதுமையான சுருட்டல் மோசடி என்று சொல்பதை விசாரித்தார்களா?


Saai Sundharamurthy AVK
செப் 16, 2025 10:58

முன்னர் வெளிநாட்டு பீட்டா அமைப்பு ஜல்லிகட்டுவை வழக்கு போட்டு தடை செய்தது. இப்போது அதே வெளிநாட்டு என்.ஜி.ஓ கால வழக்கு போட்டு வந்தாராவை முடக்கப் பார்க்கிறது. இதை உச்சநீதிமன்றம் மோப்பம் பிடித்து விட்டது.


ManiK
செப் 16, 2025 10:22

வன்தாரா உண்மையாகவே ஒரு அபூர்வமான உலகத்தரம் வாய்ந்த முன்னோடி முயற்சி. சிலருக்கு அம்பானிய எதிர்த்து பப்லிசிடி பண்ணுவதே நோக்கம்.


ramesh
செப் 16, 2025 10:03

நெருப்பு இல்லாமல் புகையாது. இந்தியாவின் மிக பெரிய பணக்காரர் என்பதால் அவர் முடிவு செய்வது தான் நடக்கும்


karthik
செப் 16, 2025 10:59

வந்துட்டான்டா நெருப்பில்லாமல் கிளிக்காது என்று.. ஏதாச்சும் உருப்படியா வேலை இருந்த பாரு


ramesh
செப் 16, 2025 11:35

நீ போய் வேலை இருந்தா பாரு அடிமை கூட்டம்


pakalavan
செப் 16, 2025 09:32

அம்பானிக்கு எதிரா தீர்ப்பு சொல்ல ...?


karthik
செப் 16, 2025 09:32

இந்த நாட்டில் நல்லது எதுவுமே நடந்துவிட கூடாது என்று ஒரு பெரும் கூட்டம் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.. அந்த கூட்டத்தை ஒழித்தால் தான் இந்தியா வல்லரசாக மாறும்


Gnana Subramani
செப் 16, 2025 08:53

மோடியை குறை சொன்னால் கூட கண்டு கொள்ளாத நீதிமன்றம், அம்பானியை குறை சொன்னால் இப்படி கோபம் கொள்கிறதே


karthik
செப் 16, 2025 09:33

சரியான அரைவேக்காடு ... உங்களுக்கெல்லாம்


Priyan Vadanad
செப் 16, 2025 07:46

அதெப்படி முறைகேடுகள் இருக்க முடியும்? முறைகேடுகள் இருந்தால்தான் வெளியே சொல்லதான் முடியுமா?


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 16, 2025 07:41

ஒரு கோடீஸ்வரன் அதிசயமாக வனவிலங்குகள், அறிய பறவைகள் என்று இந்திய தட்பவெப்பம் மற்றும் சுற்றுச்சூழலில் வாழ முடியக்கூடிய, உலகம் முழுவதிலும் இருந்து மனிதர்களிடம் அடிமைப்பட்டு, அல்லது அவர்களால் துன்புறுத்தப்பட்ட உயிரினங்களை காப்பாற்றி, பாதுகாத்து, மருத்துவம் செய்து, அவை புத்துயிர் பெற்று மகிழ்வுடன் புதுவாழ்வு பெரும் நோக்கத்துடன் அவற்றை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது வன்தாரா வன நட்சத்திரம் நிறுவனம். நாம் அனைவரும் விரும்பும் ஆனால் நம்மால் இயலாத ஒரு நற்செயலை ஒரு இளைஞர் செய்து வருகிறார். அவரின் செயலுக்கு ஆதரவு தெரிவிக்கா விட்டாலும், எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்போம். விலங்குகளுக்கு நன்மை செய்வோர் காண்பது மிக அரிது. அதை முன்னெடுத்து செய்யும் வன்தாராவை ஆதரிக்க வேண்டும். அதுவும் அவர்கள் குஜராத்தின் வறண்ட பயனற்ற நிலப்பரப்பை கடும் முயற்சியின் மூலம் ஒரு வனமாக மாற்றி அந்த செயற்கை வனத்தில் இந்த மறுவாழ்வு மையத்தை உருவாக்கியுள்ளனர் என்பது கூடுதல் செய்தி. நான் இயற்கையை நேசிப்பவன் என்பதால் இந்த பதிவு.


புதிய வீடியோ