உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொருளாதார சுதந்திரம் உள்ள பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டியதில்லை: டில்லி ஐகோர்ட்

பொருளாதார சுதந்திரம் உள்ள பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டியதில்லை: டில்லி ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெற்றவராக இருந்ததால் அவருக்கு ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை' என, டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. டில்லியை சேர்ந்த பெண் ஒருவர் ரயில்வேயில், 'குரூப் - ஏ' பிரிவு அதிகாரியாக உள்ளார். இவருக்கும் வழக்கறிஞர் ஒருவருக்கும் 2010ல் திருமணம் நடந்தது. ஓராண்டு மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். அதன் பின் மனைவி மன, உடல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும், தாம்பத்யத்திற்கு தொடர்ந்து மறுத்ததாகவும் குற்றஞ்சாட்டி கணவர் விவாகரத்து கோரினார். பதிலுக்கு அவரது மனைவியும் கணவன் கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்தார். குடும்ப நல நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் மனைவி செய்த கொடுமையின் அடிப்படையில் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. விவாகரத்துக்கு சம்மதிப்பதற்காக, 50 லட்சம் ரூபாயை நிரந்தர ஜீவானம்சமாக வழங்க வேண்டும் என மனைவி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கணவர் அந்த தொகையை வழங்கவில்லை. இதை எதிர்த்து விவாகரத்து பெற்ற மனைவி டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். வழக்கை நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் ஹரீஷ் வைத்தியநாதன் சங்கர் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அவர்கள் வழங்கிய தீர்ப்பு: நிரந்தர ஜீவனாம்சம் என்பது ஒரு சமூகநீதி பரிமாணமாகவே கருதப்பட வேண்டும். பொருளாதார ரீதியாக வலுவான இரண்டு நபர்களின் வருமானத்தை சமமாக்கும் கருவி அல்ல அது. ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம் வழங்குவது முழுதும் நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதை வழங்க உத்தரவிடும் போது வருமானம், சொத்து, நடத்தை மற்றும் பிற சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளை கணக்கில் கொள்ள வேண்டும். திருமண துணை பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெற்றிருந்தால், ஜீவனாம்சம் வழங்குவது சமூகநீதி ஆகாது. அவர்களுக்கு ஜீவனாம்சம் வழங்கவும் கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sudha
அக் 19, 2025 14:19

இது மிக தவறான தீர்ப்பு, என்னால் வாதாட முடியும் , யாராவது குரல் கொடுத்து டெல்லி தலை நகரை மாற்றுங்கள்


ஆரூர் ரங்
அக் 19, 2025 09:36

ஒரு முன்னாள் நடிகையிடம் ஜீவனாம்சம் கேட்டு வழக்குப் போட்ட வீட்டுக் கணவரும் இருந்ததுண்டு.


Barakat Ali
அக் 19, 2025 09:12

சரியான உத்தரவு ......


Ramesh Sargam
அக் 19, 2025 08:31

சிறந்த தீர்ப்பு. தனியார் கம்பெனியில் வேலை பார்த்து, பிறகு ஓய்வு அடைந்து, பென்ஷன் எதுவும் இல்லாத கணவன்மார்களுக்கு, அரசுப்பணியில் அல்லது அரசு வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு அடைந்த பெண்கள், மாதாமாதம் கணவன் செலவுக்கு பணம் கொடுக்கவேண்டும் என்றும் ஒரு தீர்ப்பு வழங்கவேண்டும். மேலும் அப்படிப்பட்ட ஆண்களுக்கு/அப்பாக்களுக்கு பெற்ற பிள்ளைகள் படித்து, வேளையில் சேர்ந்தபிறகு, மற்றும் திருமணம் ஆனபிறகு, அப்பாக்களுக்காக மாதாமாதம் பணம் கொடுக்கவேண்டும் என்று ஒரு கண்டிப்பான ஆணையை நீதிமன்றம் வழங்கவேண்டும்.


Field Marshal
அக் 19, 2025 07:17

கரிஷ்மா கபூர் பிரியா சச்தேவா வழக்கில் இப்படி நிலையை கோர்ட் எடுக்கவில்லையே ..அமெரிக்காவில் 50 சதவிகித சொத்தை கணவன் விவாகரத்து செய்த மனைவிக்கு தரவேண்டும்


chennai sivakumar
அக் 19, 2025 07:16

இது ஒரு பெரிய பணம் பறிக்கும் தொழிலாக மாறி விட்டது. கோர்ட் அதற்கு ஒரு பெரிய கடிவாளம் போட்டு விட்டது


Kasimani Baskaran
அக் 19, 2025 06:50

பிள்ளைகள் இருந்தால் பொருளாதார ரீதியாக முன்னேறிய பெண் என்றாலும் கூட பணம் செலவு செய்துதான் படிக்க வைக்க முடியும்.


GMM
அக் 19, 2025 06:32

பொருளாதார சுதந்திரம் வேறு. ஜீவனாம்சம் வேறு. ஜீவனாம்சம் ஆணுக்கு ஒரு தண்டனை. விவகாரத்து கோர அச்சம் ஏற்படும். மாத மாதம் ஆண் வழங்குவது கட்டாயமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் பெண் பலவற்றை இழந்து இருப்பாள். குடும்ப நல கோர்ட் முடிவு தான் விவாகரத்தில் இறுதி. டெல்லி கோர்ட் ஏன் வழக்கை விசாரித்து ஜீவனாம்சம் நிறுத்த வேண்டும்? ஆண் மறுமணம், மத மாற்றம் புரிவதையும் நீதிமன்றம் நிறுத்த வேண்டும்.


JaiRam
அக் 19, 2025 16:58

கணவன் கொடுமை படுத்தினால் மாமனார் மமியர் அனைவர் மீதும் பொய் புகார் கொடுப்பது எந்த நேரமும் பல ஆண்களுடன் தொடர்பில் இருப்பது சுற்றி திரிவது கேட்டால் சுதந்திரம் என்பது பின் விவகாரத்து கேட்டு வழக்கு தொடுப்பது பணம் பறிப்பது


chennai sivakumar
அக் 19, 2025 06:21

சூப்பர் தீர்ப்பு


JaiRam
அக் 19, 2025 16:59

சூப்பர் அப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை