உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த பிராண்ட் என்றாலும் குவாட்டர் வெறும் ரூ.99 தான் இங்கல்ல... ஆந்திராவில்!

எந்த பிராண்ட் என்றாலும் குவாட்டர் வெறும் ரூ.99 தான் இங்கல்ல... ஆந்திராவில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. புதிய மதுபான கொள்கையை அரசு அறிவித்துள்ளது. அது பற்றி அமைச்சர் கே.பார்த்தசாரதி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு வழங்கிய தரம் குறைந்த மதுபானங்களால் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். மலிவான விலையில் தரமான மதுவை குடிமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எனவே, அக்டோபர் 1 முதல், எந்த பிராண்டாக இருந்தாலும், குவாட்டர் எனப்படும் 180 மில்லி லிட்டர் மது புட்டியின் விலை 99 ரூபாயை தாண்டக் கூடாது. குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். மது கடைகள் காலை 10:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை இயங்கும். உரிம கட்டணம், 50 முதல் 85 லட்சம் ரூபாய் வரை நான்கு அடுக்குகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளருக்கு விற்பனையில், 20 சதவீதம் லாபம் கிடைக்கும்.இது தவிர, 12 பிரீமியம் கடைகளுக்கு ஐந்தாண்டு உரிமம் வழங்கப்படும். அதற்கான விண்ணப்ப கட்டணம், 15 லட்சம் ரூபாய். உரிம கட்டணம், 1 கோடி ரூபாய். திருப்பதியில் பிரீமியம் கடைக்கு அனுமதி இல்லை. மதுபான கடைகளுக்கான உரிமத்தில், கள் இறக்கும் சமூகத்தினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

S.Martin Manoj
செப் 20, 2024 13:17

கூட்டணி கட்சியின் தலைவர்கள் சந்திரபாபுவிடம் வாங்கி மொடக்கு மொடக் என்று குடிதுக்கொள்ளவும்


venugopal s
செப் 20, 2024 11:01

எல்லா பிராண்ட் பாட்டில்களிலும் லோக்கல் சரக்கை நிரப்பி கொடுப்பார்கள் என்று தோன்றுகிறது!


Sivagiri
செப் 20, 2024 09:23

ஓஹோ , இது வேற குட்டையில் ஊறிய மட்டை போல . . . ஆனா அதே நாத்தம்தான் - திருட்டு மாடல் நாத்தம் . . . எந்தெந்த கம்பெனிகள் சரக்கு சப்ளை செய்கின்றன , அந்த கம்பெனிகளின் முதலாளிகள் யார் யார் ? - - விவரம் சொன்னா மக்களே தெரிஞ்சிக்கிடுவாங்க , எந்த கம்பெனி சரக்கு நல்ல சரக்குன்னு , ,


KayD
செப் 20, 2024 08:39

சரக்கு ல என்ன கொழுப்பு எல்லாம் இருக்க போகுது nu தெரியலயே.. வாழ்த்துக்கள்


Sankare Eswar
செப் 20, 2024 07:03

வாங்கி குடிக்கணும்


Kasimani Baskaran
செப் 20, 2024 04:42

தீம்க்காவின் கொள்ளை லாபத்துக்கு பாஜக கூட்டணி கடிவாளம் போட நினைப்பது திராவிடர்களுக்கு தாங்கவொணாத எரிச்சலை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் 90 மில்லி சரக்கை 90 ரூபாய்க்கு விற்க ஆரம்பித்தாலும் கூட ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை


பாமரன்
செப் 20, 2024 13:43

நம்ம காசி ஏதோ சொல்ல வர்றாப்ல... யாராவது தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி சொல்லுங்க பிலீஜ்...


hariharan
செப் 20, 2024 03:10

நீங்க என்னப்பா ராஜா வீட்டு கண்ணுகுட்டி.. மோடி அள்ளி குடுக்கறாரு நீங்க துள்ளி விளையாடுறீங்க. எங்களுக்கு கிள்ளி கூட தற மாப்டேங்குறாரு அதனால சாராய வருமானத்த நம்பி பொழப்ப நடந்த வேண்டி இருக்கு.


SUBBU,MADURAI
செப் 20, 2024 01:31

அப்படின்னா ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு அதிகளவில் நல்ல மது பாட்டில்கள் கடத்தப்படும். திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளில் இருந்து டாஸ்மாக்கிற்கு வரும் மட்டமான சரக்குகள் தேக்கமடையும். ஆந்திர அரசின் இநத 99 ரூபாய் மது விற்பனை திட்டம் தமிழக மது பிரியர்களுக்கு ஒரு "வரப்பிரசாதமாகும்".


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை