உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி கூகுள் பே-வில் இதை செய்தால் கட்டணம்!

இனி கூகுள் பே-வில் இதை செய்தால் கட்டணம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மின்கட்டணம், கேஸ் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தும் போது, குறிப்பட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கப்போவதாக கூகுள் பே நிறுவனம் அறிவித்துள்ளது. டிஜிட்டல் வழியாக பணத்தை பரிமாற்றம் செய்வதில் கூகுள் பே, போன் பே, பே டி.எம்., ஆகிய செயலிகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதுபோன்ற ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலி நிறுவனங்கள், யு.பி.ஐ., (UPI) பணப்பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட தொகையை சேவை கட்டணமாக வசூலித்து, தங்களின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், போன் பே, பே டி.எம்., நிறுவனங்களைப் போன்று, சில சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் கூகுள் பே நிறுவனம் அறிவித்துள்ளது.ஏற்கனவே ரீசார்ஜூக்கு ரூ.3 சேவை கட்டணமாக கூகுள் பே வசூலித்து வரும் நிலையில், மின்கட்டணம், கேஸ் கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பில் தொகையில் இருந்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.கடந்த ஜனவரி மாதம் மட்டும் நாட்டில் ஒட்டுமொத்தமாக ரூ.23.48 லட்சம் கோடி யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், கூகுள் பே-வில் மட்டும் ரூ.8.26 லட்சம் கோடி யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

vadivelu
பிப் 21, 2025 20:59

அதை எப்போ கொடுத்தான்கா.. வேண்டாம் என்று சொல்லிடுங்க


Dharmavaan
பிப் 21, 2025 20:32

அப்போது அதன் வியாபாரம் குறையும்


Ananthan
பிப் 21, 2025 20:30

டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கும் மத்திய அரசு இக் கட்டணங்களை வசூலிக்க தடை செய்ய வேண்டும்.


Delhi Balaraman
பிப் 21, 2025 20:23

அறிவிலகள் வசம் பொறுப்பு கொடுத்த பின்னர் இப்படி தான் நடக்கும்.


Delhi Balaraman
பிப் 21, 2025 20:19

நிர்வாக திறன்கள் அற்றவர்களிடம் நிர்வாகத்தை கொடுத்ததின் விளைவை நாம் தான் சுமக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பாமல் இருக்க வேண்டும்.


vadivelu
பிப் 21, 2025 21:02

அதற்கு இன்னும் பத்து வருடங்கள் ஆகும், அதுவரை இந்த நாற்பதை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறைக்க முடியும். அடுத்த முறை கண்டிப்பாக பாதியாகும். 234 ல் கூட்டணி மூலம் மட்டுமே 118 பிடிக்க முடியும்.


Sivagiri
பிப் 21, 2025 20:08

கவர்ன்மெண்ட்டின் - - BHIM - ஆப் யூஸ் பண்ணினால் - fREE தானே . . . ஏன் பிரைவேட் யூஸ் பண்ணனும் ? . . பிரைவேட் எல்லாவனும் , முன்னாடி கேஷ்பேக் குடுத்தாய்ங்க - - இப்போ நம்மட்ட பிடிங்க ஆரம்பிச்சிட்டாய்ங்க . . .


Sivagiri
பிப் 21, 2025 20:04

இந்தியா முழுவதும் , பலசரக்கு , உணவு தானியங்கள் , மொத்த வியாபாரம் , சில்லறை வியாபாரம் , கோடானுகோடிகள் , முழுக்க கேஷ் - மற்றும் , துண்டு சீட்டுகளில்தான் நடக்கிறது . - விற்பனை வரியோ , வருமான வரியோ , எந்த கணக்கும் கிடையாது - ஆனால் இப்போது கொஞ்சம் மாறி வருகின்றது - - - அதே போல பாத்திரக்கடைகள் , துணிக்கடைகள் , ஹோட்டல்கள் , மருந்து கடைகள் , சூப்பர்மார்க்கெட்டுகள் , மற்ற எல்லாவித ஸ்பெர்ப்பார்ட்ஸ் கடைகள் , இங்கெல்லாம் , டிஜிட்டல் பெமென்ட் மூலம் - கணக்கில் வருகிறார்கள் - - இவர்கள் பத்து பெர்சென்ட் டிஸ்கவுண்ட் என்று போட்டிருப்பார்கள் , கேஷ்-கொடுத்தால் மட்டுமே டிஸ்கவுண்ட் கொடுப்பார்கள் . . . ஸ்கேன் என்றால் - கிடையாது - - என்னடா ரகசியம் என்று பார்த்தல் , ஜிஎஸ்டி - நம்மிடம் வசூலித்து , விட்டு அதை நம்மிடமே டிஸ்கவுண்ட் என்று சொல்வார்கள் . . .கவர்ன்மெண்டுக்கு பெபே காட்டி விடுவார்கள் . ..


Ram pollachi
பிப் 21, 2025 17:34

கட்டுமான துறையில் அதிக அளவில் கருப்பு பணம் விளையாடுகிறது... எந்த பில்டிங் பொறியாளர்களும் வங்கி மூலம் பரிவர்த்தனை செய்ய தயார் இல்லை... வருமானவரி பிரச்சினைக்கு பயந்து தான் பணம் கொடுத்தால் தள்ளுபடி என்று வணிகம் செய்கிறார்கள். உங்கள் ஃபோன் நெம்பரை சொல்லுங்கள் பணத்தை போட்டு விடுகிறேன் என்று சொல்லி இரண்டு நாட்கள் ஓட்டிவிடுவார்கள்... வங்கி ஸ்டேட்மெண்ட் வாங்கி பார்த்தால் யார் பணம் என்றே தெரியாது பில்லும் கிடையாது.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 21, 2025 16:37

இப்போதெல்லாம் பல கடைகளில், கேஷ் பேமெண்ட் என்றால், விலை குறைத்துக் கொடுக்கிறார்கள். குறிப்பாக பைப், குழாய், வீட்டுக்கு பம்ப், ஒயரிங், சுவிட்ச் கடைகளில்.


rama adhavan
பிப் 21, 2025 16:11

இருந்த இடத்தில் இருந்து பண பரிவர்த்ததனை செய்ய நினைத்தால் கட்டணம் செலுத்திதான் ஆக வேண்டும். இக்காலத்தில் எதுவும் இலவசம் இல்லை. இப்போதே ஐ ஆர் சி டி சி, வங்கிகள் சேவை கட்டணம் வசூல் செய்கின்றனர். ஆனால் சிறு வணிகர்கள், பெட்டிக்கடைகாரர்கள், ஏழைகள் கணக்கிக்கு விலக்கு அளிக்கலாம்.