வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆம் மக்கள் நாட்டில் உள்ள ஊழல் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் பயப்படவேண்டும்.
புதுடில்லி: கொரோனா தொற்றுபரவுவது கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம் என்று புதுடில்லி முதல்வர் ரேகா குப்தா கூறி உள்ளார்.நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கி உள்ளது. இன்றைய நிலவரப்படி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.தலைநகர் டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் கொரோனா நோய்க்கு ஆளானவர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும் சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. மற்ற மாநிலங்களிலும் மெல்ல கொரோனா தொற்று பரவி வருகிறது.இந் நிலையில், கொரோனா தொற்றைக் கண்டு யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்று டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: கொரோனா நோய் தொற்று தொடர்பான அனைத்து விவரங்களும் துல்லியமாக உள்ளன. அனைத்து பகுதிகளிலும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. என்ன மாதிரியான சுகாதார முன் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தலைநகர் டில்லியில் இன்றைய நிலவரப்படி 104 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம் மக்கள் நாட்டில் உள்ள ஊழல் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் பயப்படவேண்டும்.