உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயகத்தில் யாரும் யாரையும் விரட்ட முடியாது: ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ஜனநாயகத்தில் யாரும் யாரையும் விரட்ட முடியாது: ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

பெங்களூரு: ‛‛ ஜனநாயகத்தில் யாரும், யாரையும் விரட்ட முடியாது'' என தினமலர் நிருபரிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.விழுப்புரத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.,வை விரட்டி அடிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.இந்நிலையில், பெங்களூருவில், ஸ்டாலின் பேச்சு குறித்து மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ‛தினமலர் ' நிருபர் கேள்வி எழுப்பினார்.அதற்கு நிர்மலா அளித்த பதில்: விரட்டி அடிப்பவர்களை பற்றி அவர்களுக்கு தெரியும். யார், யாரை விரட்டி அடிப்பார்கள் என்று. ஜனநாயகத்தில் யாரும் யாரையும் விரட்டி அடிக்க முடியாது. மக்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர்கள் வருவார்கள். ஒருவராக இருந்தாலும், நூறு பேராக இருந்தாலும்.விரட்டி அடிப்போம் என சொல்பவர்கள் தான், இன்றைக்கு பாசிச கட்சிகள். தி.மு.க.,வின் அரசியல் சொற்பொழிவுகளில், அவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை யோசித்தால், இதேபோன்று அதிகமாக, கோரமாக, பயங்கரமான வார்த்தைகளை போட்டு மக்களை ஆக்ரோஷம் செய்ய முயற்சி செய்வார்கள். ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாத ஒரு கட்சி. அதனால், தான் விரட்டி அடிப்போம் என்ற வார்த்தையை சொல்கிறார்கள். அவர்கள் மட்டும் ஓட்டுப்போடவில்லை. மக்கள் அனைவரும் ஓட்டு போடுகிறார்கள். முதல்வர் இன்னும் கொஞ்சம் வார்த்தையை அளந்து பேசினால் நல்லது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Kasimani Baskaran
ஏப் 06, 2024 21:44

திராவிடர்களை மட்டும் முன்னேற்றவந்த கட்சி தமிழகத்துக்கு தேவையில்லை என்று சொல்லியிருந்தால் பாராட்டியிருக்கலாம்


தமிழ்வேள்
ஏப் 06, 2024 21:16

தேசவிரோத மதமாற்ற பிரிவினைவாத சமூகவிரோத கும்பலை அடித்து விரட்டுவதில் என்ன தவறு?


அப்புசாமி
ஏப் 06, 2024 20:51

அப்போ காங்கிரஸ் இல்லாத இந்தியா வேணும்னு தல கூவுச்சே...


Mariadoss E
ஏப் 06, 2024 20:42

உங்க தலைவர் தான் திமுக வை ஒழிக்காமல் விடமாட்டேன் என்கிறார்


sankaranarayanan
ஏப் 06, 2024 20:01

குடும்பத்தை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் - இது போன்ற கருத்துக்களை தயவுசெய்து இந்த புனித இதழில் கருக்கலாக ini போடவேண்டாம் என்பது மக்களின் கருத்து வேண்டுகோள்


Tamil Inban
ஏப் 06, 2024 19:47

நீங்க ஒருதரம் தேர்தலில் மக்களை சந்திக்கவேண்டியதுதானே அப்படி என்ன பயம் உங்களுக்கு


Mohan
ஏப் 06, 2024 19:46

எம் ஜி ஆருக்குப் பிறகு ஜெ அம்மா இருந்தவரை கருணாநிதி தவிர திமுகவினர் யாரும் ஒரு வார்த்தை தப்பாக பேச தைரியம் வந்ததில்லை உலகமகா லப்பேர்வழிகளாக தற்சமயம் வலம் வரும் நபர்களின் தலைவராக இருப்பவரிடம் வேறு எந்த மாதிரியான சொற்களை எதிர்பார்க்க முடியும் தமிழக மக்களின் ஒரே தலைவன் என "அறிவாளி"த்தனமாக மனதில் நினைத்து கொள்பவரே பிரதமர் திரு மோடி அவர்கள் இந்திய நாட்டு மக்கள் ஓட்டு போட்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தாங்கள் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, நாட்டுமக்களை எங்கு வேண்டுமானாலும் சந்திக்க உரிமையும், திறமையும் அதிகாரமும் உள்ளது என்பதை தங்களுக்கு ஞாபகப் படுத்துகிறோம் மரியாதைக்குறைவாக பேசுவது தமிழக நலனுக்கு உகந்ததா என திரு டி ஆர் பாலு அவர்ஙளிடம் தெரிந்து கொள்ளவும்


h
ஏப் 06, 2024 19:09

looters and liars dravid model viratti adipom dot alliance and dmk.


Kumar
ஏப் 06, 2024 19:02

நிர்மலா அம்மா உங்க தலைவர் மோடி தான் சொன்னாரு காங்கிரஸ் விரட்டி அடிக்கணும்னு அது அது சரினா இதுவும் சரிதானே இதுவும் தவறு என்று கூறுகிறீர்கள


Godfather_Senior
ஏப் 06, 2024 18:30

முதல்வருக்கு பேச தெரியாதம்மா யாரோ எழுதிக் கொடுத்த துண்டு சீட்டை வைத்து அவர் படிக்கிறார் என்பது தவிர, தாம் என்ன பேசுகிறோம் என்பதுகூட அவருக்கு தெரியவே தெரியாது இதுதான் உண்மை நிலவரம் என்பதை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள்


கனோஜ் ஆங்ரே
ஏப் 06, 2024 19:38

இதப்பார்றா வேலிக்கு ஓணான் சாட்சியா வர்றத?


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை