உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு; ஆந்திர முதல்வர்

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு; ஆந்திர முதல்வர்

ஹைதராபாத்: ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளில் ஒன்று என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷனுக்கு 'சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டிருப்பது இந்திய பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. நிச்சயம், பிரதமர் மோடி அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்று.பாகிஸ்தான் மக்கள் மற்றும் அந்நாட்டு ராணுவ நிலைகளுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாமல், 20 நிமிடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் மோதல் முடிவுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடி இந்தப் போரை நிறுத்தினார். அமெரிக்காவின் அழுத்தத்தினால் இந்தப் போர் முடிவுக்கு வரவில்லை. யார் பேச்சையும் கேட்கும் நிலை இந்தியாவுக்கு இல்லை. எங்களுக்கு எங்களுடைய சொந்த உத்திகள். பிரதமர் மோடியின் ஞானம் வென்றது. நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம். நாங்கள் எந்த சண்டைக்கும் போக மாட்டோம். யாராவது எங்களை சீண்டினால் சும்மா விட மாட்டோம். நாட்டைப் பாதுகாக்கும் திறன் நம்மிடமம் உள்ளது. அனைத்து நாடுகளுடனும் நட்புறவையே தொடர விரும்புகிறோம். உலகளவில் பிரதமர் மோடி மிகவும் உயர்ந்த தலைவர். அது நமது நாட்டிற்கு கிடைத்த பெருமை, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 09, 2025 06:48

பிரதமர் போரை நிறுத்தியது ஸ்டாலின் நடத்திய பேரணியை பார்த்துதான் .. இலங்கை போரை நிறுத்தியது கருணாநிதியின் உண்ணாவிரதம் தான் ,,நாங்கள் நம்புறோம் ..ஆந்திர முதல்வரே நீங்களும் நம்புங்கள்


Ramesh Sargam
ஜூன் 08, 2025 22:00

பிரதமர் மோடியிடம் நாயுடு பெருஸ்ஸா எதையோ எதிர்பார்க்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை