உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மினிமம் பேலன்ஸ் அபராத தொகை வசூலிப்பை கைவிட வங்கிகள் முடிவு

மினிமம் பேலன்ஸ் அபராத தொகை வசூலிப்பை கைவிட வங்கிகள் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால், அபராதத் தொகை வசூலிக்கும் நடைமுறையை கைவிட, வங்கிகள் பரிசீலித்து வருகின்றன.தனியார் வங்கிகள் பெரும்பாலும், சம்பள கணக்குகள் மற்றும் பிக்சட் டிபாசிட் வைத்துள்ள வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குக்கு, குறைந்தபட்ச இருப்பு வரம்பு விதிப்பதில்லை.எனவே பொதுத்துறை வங்கிகளை விட இத்தகைய சலுகை வழங்கும் தனியார் வங்கிகளில் கணக்கு துவங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.எனவே, குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை கைவிட பொதுத்துறை வங்கிகள் முடிவு செய்துள்ளன. ஏற்கனவே, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி இதை அமல்படுத்தி விட்டன. குறைந்தபட்ச இருப்பு தொகைக்கு பதிலாக, டெபிட் கார்டு, ஏ.டி.எம்.,மில் கூடுதல் பரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணம் போன்றவற்றின் வாயிலாக, வருவாய் பெற திட்டமிட்டுள்ளன.வங்கிகளில், நிகர லாபத்தை விட கூடுதலாக அபராத கட்டணம் வசூலித்தது குறித்த தகவல் வெளியானது மற்றும் மத்திய நிதி அமைச்சக கூட்டங்களில் எழுப்பப்பட்ட விமர்சனங்கள் ஆகியவற்றால், குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கு அபராதம் விதிப்பதை கைவிட பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

CHELLAKRISHNAN S
ஜூலை 08, 2025 14:03

last month I was shocked to see that my sbi account was debited with rs.45 plus amount. on enquiry I was informed by sbi mylapore that I used sbi debit card to pay eb amount. then why debit cards were issued


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 08, 2025 13:03

அதுல முடிஞ்ச அளவுக்கு சம்பாரிச்சுட்டாங்க ......


Kundalakesi
ஜூலை 08, 2025 12:46

முன்னர் 100ல் 90 பேர் தேசிய வங்கியில் தான் கணக்கு வைத்திருந்தனர். இன்று தனியார் கம்பெனி வேலையில் 95% பேர் தனியார் வங்கிக்கு சென்றுவிட்டனர்.


தத்வமசி
ஜூலை 08, 2025 12:03

வங்கிகளின் வருமானம் என்பது மக்கள் வைத்துள்ள டிபாசிட் மற்றும் வட்டிகளால் அல்ல. பொது மக்களிடம் அடாவடியாக வசூலிக்கப்படும் அபராதங்களினால் தான் வங்கியின் வருமானம் அதிகரிப்பது என்பது உண்மை. அபராதத் தொகையாக நூறு, இருநூறு என்று வசூல் செய்கிறார்கள். ஏன் இருபது முப்பது என்று கூட கழித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் வருடாத்தில் சுமார் ஆயிரம் ரூபாய் வரை கூட இப்படி இழக்கிறார்கள். அப்படியென்றால் பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ள வங்கியில் எத்தனை கோடி ரூபாய் கட்டாயமாக வசூலிக்கப் படுகிறது ? அதுவும் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிக் கடன் என்று வாங்கியவர்களிடம் இவர்கள் வசூல் செய்யும் விதம் இருக்கிறதே, இது உலகத்தில் உள்ள எந்த வங்கிக்கும் புரியாத கணக்கு.


Karthik Madeshwaran
ஜூலை 08, 2025 11:46

இங்கே பாஜக கட்சிக்கு கூஜா தூக்கும் அனைத்து சொம்புகளுக்கும் வங்கிகள் இதுவரை வங்கி கட்டணத்தில் ஏதாவது டிஸ்கோவுண்ட் கொடுத்தார்களா என்ன ? வங்கிகள் வசூலிக்கும் இந்த கட்டணங்கள் எல்லாம் 12 வருடங்களுக்கு முன்பு இல்லையே... அப்போது வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லையா என்ன? மக்கள் யோசிக்கணும். கார்ப்பரேட் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, கருப்பு பணத்தை இதுவரை மீட்காத அரசு எது என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் நன்றாக படித்த மக்கள் கொண்ட தமிழ்நாட்டில் அவர்கள் பருப்பு வேகவில்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 08, 2025 13:09

அபராதத் தொகை அல்லது அது தொடர்பான முடிவு என்பது அரசுகளைப் பொறுத்ததன்று ..... ரிசர்வ் வங்கியின் நியதிகள், அந்தந்த வங்கிகளின் தனிப்பட்ட கார்ப்பரேட் முடிவுகள் இவற்றைப் பொறுத்துத்தான்... நீங்கள் சொல்வது போல வைத்துக்கொண்டால் கூட மன்மோகன் அரசு ஆட்சியில் இருந்த பொழுது எஸ் பி ஐ - ஸ்டேட் பாங்க் - இன்சூரன்ஸ் ஐ - அதாவது கட்டாயமாக இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் - புதிய வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக்கியது .... விரும்பிய பொழுதெல்லாம் வேலை நிறுத்தம் செய்து ஊதியத்தை உயர்த்திக்கொள்ளும் நிலை இருந்தது .... பொது அறிவு திமுகவின் அடிமைகளுக்குக்குறைவு என்று தெரியும் .... .ஆனால் இப்படி மங்குணிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை ....


அப்பாவி
ஜூலை 08, 2025 11:30

எதுக்கு ஜன் தன் வங்கிக்கணக்குன்னு பீத்திக்கணும். அது மினிமம் பேலன்ஸ் இல்லேன்னு இருக்கறதையும் உருவணும்? வரவர் மத்தியதர வர்க்கத்துக்கே வேலை போய், மினிமம் பேலன்சு வெக்க முடியலை.


Saamaanyan
ஜூலை 08, 2025 11:29

நல்ல முடிவு.. வரவேற்கிறோம் ...


முருகன்
ஜூலை 08, 2025 11:22

மிக்க மகிழ்ச்சி


ஆரூர் ரங்
ஜூலை 08, 2025 10:37

நம்ம மக்களுக்கு ஒரு பைசா கூட கணக்கில் வைக்காமல் ஹை செக்யூரிட்டி செக் புத்தக வசதி. ஏடிஎம் அட்டை வசதி, நெட் வங்கி வசதின்னு எல்லாம் ஓசியில வேணும். அவ்வப்போது பர்சனல் கடன் வட்டியையும் தள்ளுபடி பண்ணணும். வங்கிக் கிளையில் ஏ.சி, குஷன் நாற்காலி தேவை.ஆனா கார்பரேட் கம்பெனிகளுக்கு கடனே தரக்கூடாது. ஆக வங்கித்துறை ஒன்றுமில்லாமல் போகணும்?


Karthik Madeshwaran
ஜூலை 08, 2025 11:39

மனசாட்சி இல்லாமல் பேச கூடாது. மக்களுக்காக தான் அரசாங்கம், அரசாங்கத்திற்காக மக்கள் அல்ல. இந்த கார்ப்பரேட் ஊழல் பாஜக கட்சி ஆட்சியில் தான் பல ஆயிரம் கோடிகள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை சமாளிக்க தான் அந்த நஷ்டத்தை இதுபோல மினிமம் பாலன்ஸ் கட்டணம் , ATM கட்டணம் அது இது என்று மக்களின் உழைப்பை- ரத்தத்தை உறிஞ்சி குடித்தார்கள். நீங்கள் பாஜக கட்சிக்காரர்கள் என்பதால் -வங்கிகள் உங்களுக்கு டிஸ்கோவுண்ட் எல்லாம் தரவில்லை நியாபகம் இருக்கட்டும். இந்த வங்கி கட்டணங்கள் எல்லாம் அநியாயம். மக்களை ஓசி என்று இப்போது நீங்கள் சொல்வது மட்டும் சரியா ?


ஆரூர் ரங்
ஜூலை 08, 2025 15:07

kaarthik ஏக்கர் கணக்கில் பொய் சொல்றதுக்கு சும்மாவே இருக்கலாம். . இப்போதுதான் அரசுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விகிதம் வரலாறு காணாத குறைவான அளவு உள்ளது. பங்குகளின் விலையும் உச்சத்தில் உள்ளன. எந்த கார்பரேட் நிறுவனத்துக்கும் கடன் தள்ளுபடி WAIVER அளிக்கப்பட்ட ஆதாரபூர்வ செய்தியேயில்லை. மத்திய நிதியமைச்சகமும் மறுத்துள்ளது. உங்களிடம் WAIVER செய்த ஆதாரம் இல்லாவிட்டால் கருத்துப் பதிவு செய்வதை தவிர்க்கவும்.


R S BALA
ஜூலை 08, 2025 09:49

வங்கி வசூல் ராஜாக்கள் இந்த பெயர் இல்லேன்னா என்ன வேறு ஒரு பெயரில் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்துகொண்டுதான் இருப்பார்கள் பரிவர்த்தனை, டெபிட்க்கார்ட், யூபிஐ என கணக்கிலிருந்து கறந்துகொண்டேதான் இருக்கிறார்கள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை