உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் சீர்திருத்தம் குறித்து நாங்கள் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை; ராகுல்

தேர்தல் சீர்திருத்தம் குறித்து நாங்கள் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை; ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் சீர்திருத்தம் குறித்து நாங்கள் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை என்று எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் கூறி உள்ளார்.பார்லிமெண்டில் தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். எதிர்க்கட்சிகளின் அனைத்து குற்றச்சாட்டுகள், கேள்விகளுக்கு அவர் நீண்ட விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் ஆவேசத்துடன் பதில் அளித்தார்.அவையில் அமித்ஷா தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க, மறுபுறம் எதிர்க்கட்சி எம்பிக்கள் அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்களை நோக்கி குரல் எழுப்பிய ஆளும்கட்சி எம்பிக்கள், உள்துறை அமைச்சரின் பதிலை கேட்காமல் சென்றால் எப்படி என்று கேள்வி எழுப்பினர். ஆனால் யாருடையே குரலையும் செவி மடுக்காமல் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் எம்பிக்களும் அவையில் இருந்து வெளியேறினர்.பின்னர் பார்லி. வளாகத்தில் ராகுலிடம், அவையில் நிகழ்ந்த எஸ்ஐஆர் விவாதம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்ததாவது:எஸ்ஐஆர் குறித்து பார்லிமெண்டில் உள்துறை அமைச்சரின் பதில், பீதியடைந்த தற்காப்பு பதிலாக தான் உள்ளது. டிஜிட்டல் முறையில், படிக்கக் கூடிய, வெளிப்படையான வாக்காளர்கள் பட்டியல்களை வெளியிட வேண்டும் என்றேன். அது பற்றி ஒரு வார்த்தை கூட பதிலில் இல்லை. நாங்கள் கேட்ட கேள்விகளில் ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் கிடைத்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கட்டமைப்பு என்ன என்பதை அனைவருக்கும் கொடுங்கள் என்றேன். அதற்கும் பதில் இல்லை. எனது நிருபர்கள் சந்திப்பில் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அவையில் அதை பற்றி எதையே பேசவில்லை. பல மாநிலங்களில் பாஜக தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஓட்டுக்களை வைத்திருப்பது மற்றும் ஓட்டு போடுவது குறித்து எந்த பதிலும் இல்லை.தேர்வு நடைமுறையில் இருந்து தலைமை நீதிபதியை நீக்குவது குறித்தும் எந்த பதிலும் இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு விதிவிலக்கு வழங்குவது குறித்து அவர் அபத்தமான பதில் கூறியுள்ளார்.சிசிடிவி காட்சிகளை வழங்காததற்கான சாக்குப்போக்கும் மிகவும் அபத்தமானது. நான் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். ஓட்டு திருட்டு மிகப்பெரிய துரோகம். இவ்வாறு ராகுல் பேட்டியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

அசோகா
டிச 11, 2025 09:44

கேனத்தனமா கேள்வி கேட்டா பதில் கிடைக்காது பப்பு


theruvasagan
டிச 11, 2025 09:31

நவீனகால தருமிக்கு மண்டபத்தில் யாரோ எழுதித்தந்த கேள்விகளை கேட்க மட்டும்தான் தெரியும். அதற்குண்டான பதில்களை புரிந்து கொள்ளுகிற அளவுக்கு அறிவு வளரவில்லை.


vbs manian
டிச 11, 2025 08:51

பெரிய வோட்டு திருட்டு குடிமகன் ஆகாமலே வோட்டு போட்டது.


பாலாஜி
டிச 11, 2025 08:46

திட்டமிட்டு நிறைவேற்றும் தில்லுமுல்லுகளுக்கு பாஜக எப்படி பதில் சொல்லும்?


jss
டிச 11, 2025 11:18

தில்லு முள்ளுகளுக்கு அக்மார்க் முத்திரை திமுகவுக்குத்தான்


Kasimani Baskaran
டிச 11, 2025 04:05

ராகுலுக்கு கேள்வி கேட்கத்தெரியுமே அல்லாமல் பதிலை புரிந்து கொள்ளுமளவுக்கு மனமுதிர்ச்சியோ அல்லது பொறுமையோ கிடையாது. கேள்வி கேட்டு சிட்டாக பறந்து விடும் தொழில் நுணுக்கம் வேறு கற்றுக்கொண்டு இருக்கிறார்.


kjpkh
டிச 10, 2025 22:03

என்ன பெரிய கேள்விகளை கேட்டு விட்டீர்கள். ஓட்டு திருட்டுக்கு ஆதாரம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அதை விவரமாகச் சொல்லி பார்லிமென்டில் விவாதிக்கலாமே. பொதுவெளியில் விவாதம் பண்ணுவோம் என்று கூப்பிடுகிறீர்கள். ஆதாரம் இருந்தால் கோர்ட்டுக்கு போக வேண்டியது தானே. ஏதாவது ஒரு கேள்வியை கேட்க வேண்டியது பதில் சொல்ல ஆளுங்கட்சியினர் ஆரம்பித்தால் பாராளுமன்றத்தை விட்டு வெளிய அடைப்பு செய்ய வேண்டியது. வெளியே வந்து சாதனை செய்தது போல் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்க வேண்டியது.


Venkat esh
டிச 10, 2025 21:29

ராகுல் காந்தி என்ற இந்த மனிதர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர் என்ற பதவியில் இருப்பது தகுதியின் அடிப்படையில் அல்ல.... ராஜீவ் காந்தி க்கு மகனாகப் பிறந்தவர் என்பதால் தான்..... இதை மானமுள்ள காங்கிரஸ்காரர்கள் ஒத்துக் கொள்வார்கள்..... காங்கிரஸ் கட்சியில் ஏது மானமுள்ள ஆட்கள் என்று கேட்காதீர்கள்


சாமானியன்
டிச 10, 2025 21:26

தயவு செய்து எந்த வித அகங்காரகமின்றி மக்கள் பிரச்னையை அணுகுங்கள். மற்ற பிரச்னைகளை அவரவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.


பேசும் தமிழன்
டிச 10, 2025 21:25

உனக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியுமா.... கேள்வி கேட்டு விட்டு.... அதற்க்கு பதில் சொல்லும் போது.... அவைக்கு வெளியே ஓடி விட வேண்டியது..... இதே பிழைப்பாக போய் விட்டது.


R.MURALIKRISHNAN
டிச 10, 2025 21:23

எப்ப பேசினாலும் ஆதாரம் இருக்கு இருக்குன்னு கூவ வேண்டியது. அட அதை எங்களுக்கு கூட காண்பிக்க வேண்டாம். நீயாவது பிரிச்சு பாக்க வேண்டியதுதானே. காங்கிரசை உலகத்தை விட்டே அனுப்பிடுவ நீ


புதிய வீடியோ