உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆகமம் அல்லாத கோவில் : 3 மாதத்தில் அடையாளம் காண சுப்ரீம் கோர்ட் அனுமதி

ஆகமம் அல்லாத கோவில் : 3 மாதத்தில் அடையாளம் காண சுப்ரீம் கோர்ட் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆகமம் அல்லாத கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உள்ள சுப்ரீம் கோர்ட், ஆகமம் அல்லாத கோவில்கள், ஆகமக் கோவில்கள் குறித்து கணக்கெடுக்க 3 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டு உள்ளது.ஆகம விதிகளுக்கு முரணாக, கோவில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரி அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உட்பட சில அமைப்புகள், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்கு நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: 2,500க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதை நிரப்புவதற்கு, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே விதித்த தடையை நீக்க வேண்டும். சட்டவிதிகளின்படி அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படும். அர்ச்சகர்கள், நிர்வாகிகளை நியமனம் செய்ய அரசு தயாராக உள்ளது. இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்கள் தமிழகத்தில் குறைந்தளவில் உள்ளது என்றார்.இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், ஆகமக் கோவில்கள் மற்றும் ஆகமம் இல்லாத கோவில்களை 3 மாதங்களுக்குள் சென்னை ஐகோர்ட் அமைத்த குழு அடையாளம் காண வேண்டும். ஆகமம் அல்லாத கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம். ராமேஸ்வரம் கோவிலில் அர்ச்சகர் பணியிடங்களை நிரப்பலாம் என உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

SIVA
மே 15, 2025 14:32

கணக்கு எடுத்த பின் இது ஆகமம் இல்லாத கோயில் என்று போர்டு வைக்க முடியுமா, செய்வீர்களா செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா ....


மூர்க்கன்
மே 19, 2025 10:18

தம்பி முதல்ல ஆகமம் என்னனு சொல்லு???


Karthik
மே 14, 2025 20:52

வரவர இப்போதெல்லாம் நீதிமன்றங்கள் நீதி வழங்குவதை தவிர மற்ற அனைத்தையும் செய்கிறது. உதாரணத்திற்கு இப்போது .. பணியாளர் தேர்வாணைய அதிகாரி / வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி போல் இறைவனுக்கு சேவகம் செய்யும் கோவில் அர்ச்சகரை பணியாளர்களாக நியமனம் செய்யும் உத்தரவு. உண்மையில் இது நீதிமன்றம் தானா..? இதுதான் சம நீதி வழங்கும் தூணா..??


Kulandai kannan
மே 14, 2025 19:35

இதே முனைப்பை தமிழக அரசும், சுப்ரீம் கோர்டும் வஃக்ப் விஷயத்தில் காட்டு மா? மசூதிக்கு யார் முல்லா என்றோ, சர்ச்சுக்கு யார் பாதிரி என்றோ அரசு நியமிக்குமா?? தமிழ்நாட்டில் உள்ள பெரியார், அண்ணா, அம்பேத்கார், கருணாநிதி மணிமண்டபங்களையே வழிபாட்டுத் தலங்களாக அறிவித்து யாரை வேண்டுமானாலும் மணியாட்ட நியமிக்கலாமே.


sankaranarayanan
மே 14, 2025 18:51

திராவிடமாடல் அரசில் எந்த சாதியினரும் முதல்வராக ஆகமுடியுமா முதலில்


Balasubramanian
மே 14, 2025 17:40

கோயில்கள் ஊரார் சொத்து ஆகவே யாருக்கும் பட்டா போட்டுக் கொடுக்கலாம்! யாரையும் பதவியில் அமர்தலாம்! ஏனெனில், இவர்கள் ஆட்சியில் உள்ள வரை, அனைத்து இந்துக் கோவில்களுக்கும், இந்துக்களை வெறுக்கும் இவர்களே பொறுப்பு!


எஸ் எஸ்
மே 14, 2025 17:32

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் சங்க தலைவர் அரங்கநாதன் என்பவர் ஒரு பெரியாரிஸ்ட். இவர் அர்ச்சகர் ஆகி பூஜை செய்ய வேண்டுமாம்!


Amar Akbar Antony
மே 14, 2025 17:21

கோவில்களை நீங்களோ, உங்க முன்னோர்களோ கட்ட வில்லை, எங்களோட மன்னர்கள் கட்டியது:- உண்மை உங்கள் வீட்டையும் நீங்கள் கட்டவில்லேயே. அதனால் வீட்டில் நடத்தும் காரியங்களுக்கு உங்களுக்கு உரிமையில்லாய் என்று கூறமுடியுமா?


Barakat Ali
மே 14, 2025 17:08

எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்.. ஆனா என் குடும்ப கட்சிக்கு என் குடும்ப வாரிசுகள் மட்டுமே தலைவர் ஆகமுடியும்.. இதுதான் சமூக நீதி.....


தமிழன்
மே 14, 2025 19:17

ரெண்டும் சரி இல்லேன்னு ஏத்துக்கிறியா ???


Ramesh Sargam
மே 14, 2025 16:54

இந்த அளவுக்கு கோவில் விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட்டதில்லை. தலையிடுவதற்கு காரணம் திமுக அரசின் அனாவசிய தலையீடு ஹிந்து கோவில் விஷயங்களில். இப்படி கிறிஸ்துவ, இஸ்லாமிய வழிபாட்டு விஷயங்களில் தலையிடுகிறதா திமுக அரசு?


Indhiyan
மே 14, 2025 18:43

மற்றவர்கள் விஷயத்தில் எப்படி தலையிடுவார்கள்? பயம் பயம். கோழைகள்


Velayutham rajeswaran
மே 14, 2025 16:15

தேவை இல்லாத வேலை


புதிய வீடியோ