உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலுக்கு சிக்கல்: ஜாமினில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்த ஜார்க்கண்ட் கோர்ட்

ராகுலுக்கு சிக்கல்: ஜாமினில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்த ஜார்க்கண்ட் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: காங்கிரஸ் எம்.பி. ராகுலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்டை ஜார்க்கண்ட் சாய்பாசா நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 2018ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் எம்பி., யான ராகுல், அப்போது பா.ஜ., தலைவராக இருந்த அமித் ஷா பற்றி சர்ச்சையான சில விமர்சனங்களை முன் வைத்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f3bdu16v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராகுலின் இந்த பேச்சுக்கு பா.ஜ.,வில் இருந்து கடும் எதிர்ப்பும், கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து பா.ஜ.,வின் பிரதாப் கட்டியார் ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். பின்னர், ஜார்க்கண்ட் ஐகோர்ட் உத்தரவை அடுத்து, இந்த வழக்கானது 2020ம் ஆண்டு பிப்ரவரியில் ராஞ்சியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பலமுறை சம்மன் அனுப்பியும், வழக்கில் நேரில் ஆஜராகாமல் ராகுல் இருந்துள்ளார். இந் நிலையில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி ராகுல், சாய்பாசா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், ராகுலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. ஜூன் 26ம் தேதி நேரில் விசாரணைக்கு வருமாறும் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, 2018ம் ஆண்டு கர்நாடகா தேர்தலின் போது, அமித் ஷா குறித்து ராகுல் சர்ச்சையாக பேசியதாக பா.ஜ., மூத்த தலைவர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சுல்தான்பூர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், வக்கீல்கள் பயிலரங்கு நடந்ததால் அன்றைய தினம், இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தாமரை மலர்கிறது
மே 24, 2025 23:46

ராகுல் வாயை தொறந்தா சர்ச்சை பேச்சுதான். ரெண்டு வருடம் கடுங்காவல் தண்டனை கொடுத்தால் தான் வாயை மூடுவார். எம்பி பதவி காலி. டெல்லி பங்களா வீடு காலி.


Godfather_Senior
மே 24, 2025 19:07

இப்போ உச்ச கோர்ட் இவர்கள் ஏவல் ஆட்கள்தான். ஆகவே ஒரு கவலையும் இன்றி பப்பு ராஜா நடை போட்டு வளம் வந்து மீண்டும் அவதூறு பரப்புவார். திருட்டுக் காலேஜியம் கிரிமினல்கள் இருக்கும்வரை கிரிமினல்களின் ஒருவரையும் எந்த கோர்ட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதே நிதர்சன உண்மை.


spr
மே 24, 2025 18:54

அட போங்கைய்யா நாளைக்கே இதனைத் தள்ளுபடி செய்துவிடும் அதென்னவோ இந்த எதிரிக்கட்சிங்க இருக்கற வரைக்கும் கபில் சிபில், அபிஷேக் காட்டிலே மட்டும் எப்பவுமே மழை.


MUTHU
மே 24, 2025 18:33

கபில் சிபில். அபிஷேக் சொங்கி. வரிசை கட்டி வந்து வாதாடுவாக.


V.Mohan
மே 24, 2025 18:04

அட காங்கிரஸ் புத்திசாலி தலைவர்களே நீங்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் உங்கள் தொகுதி மக்களுக்காக சேவைசெய்யும் வகையில் பஞ்சாயத்து,நகராட்சி, மாநகராட்சி,மாநில பொறுப்பு வகித்தபின் தேசிய அளவில் தங்கள் சொந்த தொகுதி மூலம் பிரபலம் அடைந்து கட்சி பதவி வகிக்கிறீர்கள். இந்த மாதிரி எதுவும் செய்யாமல் தன் குடும்பத்தின் ஆதரவாலும் பணத்தாலும் எம்.பி. பதவியை பெற்று, உங்களை தனக்கு கீழ்படிய வைத்து தலைவர் பதவியில் நீடிக்கிறார். ராகுல்ஜி எந்தவித தெளிவும் இல்லாமல் கேள்வி கேட்பதும், தேச நலன் சார்ந்த முக்கிய விஷயங்களில் """மிக மிக""""""புத்திசாலி"""" போல எதிரிக் கருத்துகளை சொல்லி நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைக்க நிறையவே முயற்சி செய்கிறார். இதையெல்லாம் பொறுத்துக் கொள்கிற அளவுக்கு ஏன் உங்கள் மனது மரத்து போனது ???


ஆரூர் ரங்
மே 24, 2025 17:10

அதெல்லாம் விட்டுடுவாங்க. இல்லாட்டி இருக்கவே இருக்கு


Karthik
மே 24, 2025 17:10

இந்தப் விளையாட்டு பிள்ளைய புடிச்சு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்து, எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து சி பி எஸ் இ பாடங்களையும் படிச்சி பரீட்சை எழுதி பாஸ் மார்க் வாங்கினா மட்டும் தான் விடுதலை அப்படின்னு தீர்ப்பு சொல்லுங்க யுவர் ஹானர்.


என்றும் இந்தியன்
மே 24, 2025 18:38

மிக மிக சரியான வார்த்தை


Sundaran
மே 24, 2025 17:09

பிடித்து உள்ளே போடுங்கள். நாட்டை குட்டிசுவராக்கிய குடும்பம்


Rajasekar Jayaraman
மே 24, 2025 16:49

ஒருமுறையாவது கைது செய்தால் மட்டுமே அடங்குவான்.


sridhar
மே 24, 2025 16:02

Ok , no prison term . But put him in a lunatic asylum.


புதிய வீடியோ