உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., கலவர பகுதியில் இயல்பு நிலை திரும்பியது

உ.பி., கலவர பகுதியில் இயல்பு நிலை திரும்பியது

சம்பல், உத்தர பிரதேசத்தில், மசூதியை ஆய்வு செய்த பகுதியில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதையடுத்து அங்குள்ள பள்ளிகள், கடைகள் மீண்டும் நேற்று திறக்கப்பட்டன. இணைய சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இங்கு ஏற்கனவே ஹிந்து கோவில் இருந்ததாகவும், அதை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 24ம் தேதி ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் மசூதிக்கு வந்தனர். அப்போது, அதிகாரிகள் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்கியது. இதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் நோக்கில், இப்பகுதியில் உள்ள பள்ளிகள் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டன. இதுதவிர சம்பல் தொகுதியின் சமாஜ்வாதி எம்.பி., ஜியா வுர் ரஹ்மான் பர்க், அத்தொகுதி எம்.எல்.ஏ., இக்பால் முகமதுவின் மகன் சோஹைல் இக்பால் உட்பட 2,750க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில், சம்பல் பகுதியில் இயல்பு நிலை திரும்பியதால் நேற்று பள்ளிகள், கடைகள் திறக்கப்பட்டன; எனினும், இணையதள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. சம்பலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில், சமாஜ்வாதி கட்சியினர் நேற்று ஆய்வு செய்ய சென்றபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை