உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆத்திரமூட்டும் முகமது யூனுஸ் அறிக்கை: தலைவர்கள் கண்டனம்

ஆத்திரமூட்டும் முகமது யூனுஸ் அறிக்கை: தலைவர்கள் கண்டனம்

புதுடில்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கக்கடலை அணுகுவதற்கான பாதுகாவலராக வங்கதேசம் விளங்குவதாக, அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறியுள்ளதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள வங்கதேசம் சீனாவின் கடன்களை அடைக்க முடியாமல் திணறுகிறது. இந்நிலையில், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை, முகமது யூனுஷ் சமீபத்தில் சந்தித்தார். அப்போது, இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டு உள்ளன. அவை வங்கக்கடலை அணுகுவதற்கு வழியே இல்லை. எனவே, இந்த பகுதிகள் வங்கக்கடலை அணுகுவதற்கான பாதுகாவலனாக வங்கதேசம் உள்ளது. அதனால், வங்கதேசத்தில், சீனா அதிக முதலீடுகளை செய்து, உற்பத்தி சந்தைப்படுத்துதலை அதிகரித்தால், நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் என அவர் கூறினார். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்திய தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; வடகிழக்கு மாநிலங்கள் குறித்த முகமது யூனுஸ் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தக் கருத்து, இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடத்துடன் தொடர்புடையது. வடகிழக்கை பிரதான நிலப்பகுதியில் இருந்து தனிமைப்படுத்த இந்த முக்கியமான பாதையைத் துண்டிக்க பரிந்துரைப்பதாக உள்ளது. எனவே, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடத்தின் அடியிலும் அதை சுற்றியும் மிகவும் வலுவான ரயில் மற்றும் சாலை இணைப்புகளை உருவாக்குவது முக்கியம் ஆகும். முகமது யூனுஸின் இத்தகைய ஆத்திரமூட்டும் அறிக்கைகளை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் அவை ஆழமான மற்றும் நீண்டகால நிகழ்ச்சி நிரல்களை பிரதிபலிக்கின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா வெளியிட்ட அறிக்கையில்,'' இந்தியாவை சுற்றி வளைக்க சீனாவை வங்கதேசம் அழைக்கிறது. வங்கதேச அரசின் இந்த அணுகுமுறை நமது வடகிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தானது. மணிப்பூரை பற்றி அரசு கவலைப்படவில்லை. சீனா ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் குடியேறி உள்ளது. நமது வெளியுறவுக் கொள்கை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளதால், இந்தியாவிற்கு ஆதரவான நாடு இன்று நமக்கு எதிராக அணிதிரட்டுவதில் ஈடுபட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Kasimani Baskaran
ஏப் 02, 2025 04:04

வங்கத்தில் இருந்து கள்ளக்குடியேறிகளாக இந்தியாவுக்குள் வந்தவர்களை வெளியேற்றினால் பிரச்சினை தீரும்.


Rajan A
ஏப் 01, 2025 23:32

நோபல் கமிட்டியை ஆய்வு செய்ய வேண்டும். நிறைய... பரிசு பெற்ற உள்ளனர்.


Venugopal, S Tambras
ஏப் 01, 2025 21:48

முதல்ல ஒவ்வொரு வந்தேறிகளை கை மற்றும் கால் விலங்கிட்டு விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே அவன் நாட்டில் தள்ளி விட்டால் இங்கே ஒருத்தனும் கூவ மாட்டான். குல்லா போட்டு கஞ்சி குடித்தால், கிறிஸ்துமஸ் அன்று நானும் கிறிஸ்தவர் என்று கூறினால் அது மாத சார்பின்மை...


RAJ
ஏப் 01, 2025 21:45

பவன் கெரா.... உங்கள் ஆட்சியில் மாண்புமிகு ஜெய்ஷங்கர் மாதிரி ஒரு வெளியுறவுத்துறை அமைச்சரை சுட்டிக்காட்டுங்கள் பார்க்கலாம்.. காங்கிராஸ் ஆட்சியின் முட்டாள்தனத்தாலும்.. அறிவற்ற நபர்களாலும்தான் இந்திய வளர்ச்சியில் தாமதம் இருந்தது.. முகமது யூனுஸ் ஆடிக்காற்றில் ஒரு அழுக்கு ... துடைத்து எறியப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.. காங்கிரஸ் ஒரு கறைபடிந்த அழுக்கு.. அதுவும் காணாமல் போகும்.


C.SRIRAM
ஏப் 01, 2025 21:27

பர்மா வழியாக கடல் வழிப்பாதை அமைப்பது ஏழு வடகிழக்கு மாநிலங்களுக்கும் நல்லது . பங்களாதேஷ் நாட்டை கடல் முற்றுகை கூட இடலாம் . இந்த பயலுக்கு எப்படி நோபல் பரிசு ?.


நிக்கோல்தாம்சன்
ஏப் 01, 2025 21:26

மீசையில்லா இந்த மனிதனை இன்றுடன் அன்போடு முகம்மது யூனிச் அலி என்று எழுதலாமா


Mr Krish Tamilnadu
ஏப் 01, 2025 21:08

இயலாதவர்களுக்கு சிறுக சிறுக கடன் கொடுத்து, அவர்கள் இடத்தை அபகரிக்கும் முறை உள்ளூரில் மட்டும் என நினைத்தேன். நாடுகளுக்கு இடையேயுமா?. ஐ.நா. இந்த கடன் அளவுகளை முறைபடுத்தாத? போர் என்றால் வேடிக்கை தான் பார்க்கும் நாடுகள், இந்த விருந்தோம்பல் நட்பு எவ்லாம் எந்தளவு கை கொடுக்கும் என தெரியவில்லை. இலங்கையில் தமிழன் கைப்பற்றி ஆட்சி செய்யும் பகுதியை தனி நாடாக மாற்ற உதவி செய்ய சொன்னோம் காதில் வாங்கவில்லை. இலங்கைக்கு உதவி செய்தீர்கள். இன்று? அந்தம்மா லண்டன் போகுகிறார் என்றீர்கள், பிறகு எந்த நாடுகளும் அடைக்கலம் தரவில்லை என்றீர்கள். தனக்கு ஆபத்தில்லை என்றால் தான் தர்மம். நிலைப்பாடுகள் தெளிவாக இருக்க வேண்டும்.


Rajan A
ஏப் 01, 2025 23:33

ஐநாவா? அது பல் புடுங்கி வேகு காலாமாகிவிட்டது


S.Martin Manoj
ஏப் 01, 2025 19:57

இந்தியாவை சுற்றிலுமுள்ள நாடுகளை கடனாளி ஆக்கி சீனா ஆக்கிரமிக்க துவங்கி உள்ளது,பாகிஸ்தானை போல் இந்திய எல்லை அருணாச்சல் பிரதேசம் மாநிலங்களையும் ஆக்கிரமிக்க துவங்கி உள்ளது. இது இந்திய இறையாண்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும், போலி தேசப்பற்று ,மத பிரிவினை ,மத கலவரங்களை கை விட்டு நாட்டை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும். இல்லை என்றால் நாடு சுற்றிலும் வேலியடைக்கபடும் ஆபத்து உள்ளது.


Kumar Kumzi
ஏப் 01, 2025 23:24

பார்ர்ரா பொங்குறான் ஹாஹாஹா


ஆரூர் ரங்
ஏப் 01, 2025 19:37

சீனாவுக்கு அவர் அதிக இடம் கொடுக்க முயன்றால் டீஸ்டா நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என்று கூறவேண்டும். இவர்களைப் பற்றி ஈர வெங்காயம் சரியாகவே சொன்னார். (பாகிஸ்தான் எனும்?) சாணிக்கு பயந்து ம..த்தை மிதித்து விட்டோம்


GMM
ஏப் 01, 2025 19:24

வங்கதேசத்தை இந்திய மாகாணம் ஆக்கி பின் மாநிலம், யூனியன் ஆக்க வேண்டும். இந்துக்களை காக்க அந்நிய மதத்தினர் யாருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்க கூடாது. சீனா பொருளாதாரம் மேற்கத்திய நாடுகள் மூலம் சரியும் வரை இந்தியா அமைதி காக்க வேண்டும்.


மூர்க்கன்
ஏப் 03, 2025 12:36

அடுத்தவான் எப்போ விழுவான்னு பார்த்துகிட்டு நடந்தா நீ முதல்ல விழுந்துடுவ ?? எச்சரிக்கைல


சமீபத்திய செய்தி