தேசியம்: விரும்பவில்லை!
விரும்பவில்லை!
உலகின் வல்லரசு நாடுகள் நம் நாடு முன்னேறுவதை விரும்பவில்லை. அவை அதிகாரத்தை மட்டுமே நாடுகின்றன. மற்ற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டிலும், அழுத்தத்திலும் வைத்திருக்கவும் விரும்புகின்றன. நம் நாடு வளர்ந்தால் வல்லரசு நாடுகளின் கடைகள் மூடப்பட்டு விடும். இதனால், நம் நாட்டின் வளர்ச்சியை அவை விரும்பவில்லை.- மோகன் பாகவத்தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,
சுயமரியாதை இல்லை!
உ.பி., சட்டசபை தேர்தலில், 180 இடங்களை கேட்ட காங்கிரசுக்கு, வெறும், 26 தொகுதிகளையே சமாஜ்வாதி ஒதுக்கி உள்ளது. இக்கூட்டணியில் பரஸ்பர மரியாதை, சுயமரியாதை இல்லை. இரு கட்சிகளும் ஒருவரையொருவர் பலவீனப்படுத்தி முன்னேற முயற்சிக்கின்றன. இந்த கூட்டணியை தேர்தலில் மக்கள் நிராகரிக்கப் போவது உறுதி.- சிராக் பஸ்வான்மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி கட்சி
கேலிக்கூத்து!
தமிழகத்தில் ஆளும் த.வெ.க., – காங்., கூட்டணி அரசு, நாட்டின் கலாசாரத்தை அவமதித்து விட்டது. உச்ச நீதிமன்றம் உத்தவிட்டும், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாமல், அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கி உள்ளது. அரசியலமைப்பை பாதுகாப்பதாக வாய்க்கிழிய பேசும் காங்., – எம்.பி., ராகுல், தற்போது என்ன சொல்லப் போகிறார்?- சுதான்ஷு திரிவேதிராஜ்யசபா எம்.பி., – பா.ஜ.,