உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லை: நாட்டின் மொத்த வரி வசூலில் 24 % செலுத்தும் ஜெயின் சமூகம்!

மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லை: நாட்டின் மொத்த வரி வசூலில் 24 % செலுத்தும் ஜெயின் சமூகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: ''பொம்மைகள் முதல் ராணுவ டாங்கிகள் வரை, இந்தியா அனைத்தையும் உருவாக்குகிறது. இந்தியா உலகின் தொழிற்சாலையாக உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை'' என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஜெயின் சமூகத்தின் கொள்கை, கோட்பாடுகள் இந்திய கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஜெயின் சமூகத்தினர் உலகில் கடின உழைப்பாளியாக இருக்கின்றனர். இந்தியாவின் ஆன்மிக, கலாசார பயணத்தில் ஜெயின் சமூகத்தின் வரலாறு விலைமதிப்பற்ற பங்களிப்பை கொண்டுள்ளது. மருத்துவம், விமானம், போக்குவரத்து மற்றும் கல்வித் துறையாக இருந்தாலும், ஜெயின் சமூகத்தினர் முன்னணியில் உள்ளனர். இந்தியாவில் ஜெயின் மக்கள் தொகை 0.5 சதவீதம் தான். ஆனால் அவர்கள் மொத்த வரி வசூலில் 24 சதவீத பங்களிப்பை வழங்குகின்றனர். பொம்மைகள் முதல் ராணுவ டாங்கிகள் வரை, இந்தியா அனைத்தையும் உருவாக்குகிறது. இந்தியா உலகின் தொழிற்சாலையாக உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 04, 2025 21:13

அமைச்சரின் ஐஸ் வைக்கும் காரணம் இதோ.. ஜெயின் சமூகத்திற்கும் மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கும் இடையிலான பதட்டங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. கடந்த ஆறு மாதங்களில், நூற்றாண்டு பழமையான கோயிலை இடித்தது, புறாக்களுக்கு உணவளிக்கும் நடைமுறைகளை கடுமையாக்கியது, கோயில் யானையை நீதிமன்ற உத்தரவுப்படி வேறு இடத்திற்கு மாற்றியது போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஜெயின் சமூகத்திற்கும் மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கும் இடையிலான பதட்டங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஜெயின் மக்கள் வசிக்கும் மகாராஷ்டிரா, அடிக்கடி தெருப் போராட்டங்களைக் கண்டுள்ளது, இதில் சமூகம் நிர்வாகம் அதன் மத மரபுகளுக்கு உணர்திறன் இல்லாதது என்று குற்றம் சாட்டியுள்ளது. - இந்தியன் எக்ஸ்பிரஸ்


Barakat Ali
அக் 03, 2025 20:18

அதை எங்கள் துக்ளக்கார் குடும்பம் ஆட்டயப்போட நீங்கள் நிதி ஒதுக்க வேண்டும் .....


Ravi Kumar
அக் 03, 2025 19:43

சௌகார்பேட் ,பாரிஸ் ஏரியா , எவ்வளவு கோடியானாலும் சொத்து , வீடு , வாங்கும் ஒரே மக்கள் .


ஜெய்ஹிந்த்புரம்
அக் 04, 2025 20:59

ரொக்கமாக. கருப்புப்பணம் அவர்களிடம் தான் உள்ளது


Modisha
அக் 03, 2025 18:40

வேறு யாரோ 15% இருக்காங்க. ஆனா 1% தான் வரி கட்டறாங்க .


ஆரூர் ரங்
அக் 03, 2025 18:21

கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீட் வட்டி எல்லாத்திலும் கரூர் கம்பெனிய மிஞ்ச நாட்டிலேயே ஆளில்லை.


GMM
அக் 03, 2025 18:20

இது போன்ற விவரங்கள் மக்களுக்கு தெரிய வேண்டும். சிறுபான்மை மக்கள், இந்து மதத்தில் பிற்படுத்த சமூகம்,ஒடுக்க பட்ட சமூகம் நாட்டிற்கு வரி செலுத்தும் விவரம் பல சலுகைகள் பெறுவதால் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட வேண்டும். கல்வி, மருத்துவம், அரசு வேலை பெறும் சமூக விவரங்கள் வெளியிட வேண்டும். அதிக வரி செலுத்தும் மக்கள் உலகம் முழுவதும் அதன் நாடுகள் கௌரவிக்க வேண்டும். வரி செலுத்தும், வங்கியில் சேமிக்கும் மக்கள் பொது இடங்களில், அரசு சலுகையில் முன் உரிமை பெற வேண்டும். அப்போது தான் வரி செலுத்தும் ஆர்வம் வரும். ஓட்டு போட தகுதி நிர்ணயம் செய்ய கட்சி கொள்கை முடிவு மாறும். நாடு வேகமாக வளரும்.


பேசும் தமிழன்
அக் 03, 2025 18:12

அவர்கள் செலுத்தும் வரிப்பணம்.... 5.... 6.... பிள்ளைகளை பெற்று இருக்கும் மக்களுக்கு ரேசன் பொருட்கள் என்ற பெயரில் வீணடிக்கிறார்கள்.


Rathna
அக் 03, 2025 17:57

குஜராத், ராஜஸ்தான் போன்ற வறண்ட பாலைவன பகுதிகளில் இருந்து, ஆப்பிரிக்கா, பசிபிக் தீவுகள், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே பிழைப்பு தேடி போனவர்கள் இவர்கள். குஜராத்தில் 100 ரூபாய்க்கு வாங்கும் ஜவுளியை ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் 1000 ரூபாய்க்கு விற்பனை. அதேபோல வைரங்கள், பஞ்சு விற்பனை. கடுமையான உழைப்பாளிகள். பெரிய லாபம். அதை ஒப்பு கொள்ள வேண்டும். ஆனால் இன்னொரு சமூகம் 24% இருந்து கொண்டு 1% வரி கூட செலுத்துவதில்லை நாட்டில் கலவரம் மட்டுமே அவர்கள் பங்கு. அதை பற்றி என்ன சொல்ல?? ஆனால் innoru


Khalil
அக் 03, 2025 17:33

வட்டிக்கு விட்டு மக்களின் பணத்தை உறிஞ்சுவது உழைத்து சாப்பிடறதா ?


ஜெய்ஹிந்த்புரம்
அக் 03, 2025 17:14

90% கொடுக்கல் வாங்கல், trade அதே ஒரு சதவீத மார்வாடிகள் மூலம் தான் நடக்கிறது. ஆன அவரு 24% மட்டும் தான். மீதி 64% கருப்பு சந்தை. இது பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்க அமைச்சர் அவர்களே


சமீபத்திய செய்தி