உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதுவும் செய்ய முடியாது!

எதுவும் செய்ய முடியாது!

ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதால் தான் தோல்வி அடைந்தது என, எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இதன் வாயிலாக மற்ற கட்சிகளின் ஆதரவு இல்லாமல் அந்த கட்சியால் எதுவுமே செய்ய முடியாது என்பது உறுதியாகி உள்ளது.ஷெஷாத் பூனாவாலாசெய்தி தொடர்பாளர், பா.ஜ.,

தோல்விக்கு தீர்வு காண்போம்!

ஹரியானாவில் தோல்வி அடைவோம் என எதிர்பார்க்கவில்லை. எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் இது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளேன். எங்கு தப்பு நடந்தது என்பது குறித்து விரைவில் ஆய்வுசெய்து, அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்போம்.மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்கிரஸ்

நாடகம் வேண்டாம்!

கேரளாவில், ஆளும் இடதுசாரி அரசுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே மறைமுகமான தொடர்பு உள்ளது. ஆனால், கவர்னரும், முதல்வரும் மோதல் போக்கு இருப்பது போல் நாடகமாடுகின்றனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சமரசமாகி விட்டனர். வி.டி.சதீஷன்மூத்த தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை